THAMILEELAM

லேபிள்கள்

எனது வலைப்பதிவு பட்டியல்

செவ்வாய், 5 ஜனவரி, 2010

கூட்டமைப்பின் ராஜதந்திரம்

பொன்சேகாவை, சம்பந்தன் சந்தித்து 10 அம்சத்திட்ட ஆவணம் கையளிப்பு
செவ்வாய்க்கிழமை, 05 சனவரி 2010
எதிரணியின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் நேற்று மாலை சந்தித்து பேசியுள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது, ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்க வேண்டுமானால் எத்தகைய நடவடிக்கைகளை ஐக்கிய தேசிய முன்னணியும், ஜெனரல் சரத் பொன்சேகாவும் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து சம்பந்தன் எம்.பி. விளக்கிக் கூறியுள்ளார்.
இந்த சந்திப்பில்,
அதியுயர் பாதுகாப்பு வலயங்களை நீக்குதல், உரிய வகையில் மீள்குடியேற்றத்தை முன்னெடுத்தல், தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்தல், மீன்பிடித் தடையை முற்றாக நீக்குதல், வர்த்தக வாணிப தடையை நீக்குதல்,இராணுவ முகாம்களை இடமாற்றியமைத்தல்
உள்ளிட்ட 10 அம்சங்களை அடங்கிய ஆவணமொன்றை ஜெனரல் சரத் பொன்சேகாவிடம் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் கையளித்துள்ளார்.
இந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு முடிவெடுக்கப்படுமென சம்பந்தன் எம்.பி. தெவித்துள்ளார். அத்துடன் இந்த விடயங்கள் தொடர்பாக யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஜெனரல் சரத் பொன்சேகா அறிவித்துள்ளதாகவும், இவை தொடர்பான திட்டங்களைத் தயாரித்துள்ளதாகவும் இங்கு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, இந்தச் சந்திப்புக் குறித்து கருத்துத் தெரிவித்த எதிரணி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் பேச்சாளரும், ஜே.வி.பியின் பாராளுமன்றக் குழுத் தலைவருமான அனுரகுமார திஸாநாயக்க, ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளது எனவும், அவர்கள் பொன்சேகாவை ஆதரிப்பார்கள் என்று எதிர்பார்க்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

புலிகளின் சொத்துக்களை முடக்க நடவடிக்கை

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச சொத்துக்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் ஆரம்பம்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதே சொத்துக்களை அடையாளம் காணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான சர்வதேச சொத்துக்களை அரசுடமையாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. புலனாய்வுப் பிரிவினர் ஏற்கவே புலிகளுக்கு சொந்தமான ஒரு தொகுதி சர்வதேச சொத்துக்களை இனம் கண்டு, பட்டியல் படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஏனைய சொத்துக்களை அடையாளம் கண்டு பட்டியல் படுத்தும் பணிகளையும் புலனாய்வுப் பிரிவினர் தீவிரப்படுத்தி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. புலிகளின் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் மற்றும் கப்பல் ஒன்றை மீட்டமை மிகப் பெரிய சாதனைகளாகும் என புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். உலகமெங்கிலும் வாழ்ந்து வரும் புலம்பெயர் தமிழர்களிடம் பணம் திரட்டும் நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பா, ஸ்கென்டினேவிய நாடுகள், அவுஸ்திரேலியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் வாழும் இலங்கை புலம்பெயர் தமிழர்களிடம் பணம் திரட்டும் நடடிக்கைகள் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சில நாடுகளில், புலிகளுக்கு பணம் வழங்கிய நன்கொடையாளர்கள் பணத்தை மீளளிக்குமாறு நீதிமன்றத்தின் உதவியை நாடியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு சொத்துக்களை அரசுடமையாக்கும் பணிகளை முன்னெடுக்கும் நோக்கில் அரசாங்க அதிகாரிகள் குறித்த நாடுகளுக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாரியளவு பணத் தொகை ஒரு நாட்டிலிருந்து இன்னோர் நாட்டிற்கு இடமாற்றம் செய்யப்படும் சம்பவங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி உன்னிப்பாக அவதானித்து வருவதாக குறிப்பிடப்படுகிறது..

கூட்டமைப்பின் தர்மசங்கடம்

கூட்டமைப்பின் முடிவு இன்று பொன்சேகா சார்பாக வரும்.!
ஆனாலும் உள் முரண்பாடு தொடர்ந்தும் நீடிக்கின்றது
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்கூட்டமைப்பின் முடிவு பெரும்பாலும் இன்று நண்பகல் அளவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது அநேகமாக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதாகவே அமையும் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.எனினும் தமிழ்கூட்டமைப்பின் ஐந்துக்கும் குறையாத நடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த முடிவை எதிர்ப்பார்கள் என்று அறியப்படுகின்றது.ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிக் கும் முடிவைத் தமிழ்க் கூட்டமைப்பு இன்று எடுத்து அறிவித்தாலும், அது தொடர்பில் கூட்டமைப்புக்குள் உள்முரண்பாடு நீடிக் கும் என்று தெரிகின்றது.இதற்கிடையில் நேற்று மதியம் தமிழ்க் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் சென்று எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத்பொன் சேகாவை சந்தித்தமையை அடுத்து, தமிழ்க் கூட்டமைப்பு பொன்சேகாவை ஆதரிக்கும் முடிவை எடுத்துவிட்டது என்ற செய்தியை பொன்சேகாவின் தேர்தல் அலுவலகம் பகிரங்கமாக வெளியிட்டுப் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. பல இணையத்தளங்கள் இச்செய்தியை விசேட தகவலாக அறிவித்தன. எனினும் தமிழ்க் கூட்டமைப்பின் தலைமைகள், இவ்விடயத்தில் இறுதி முடிவு இன்று நடக்கும் கூட்டமைப்பின் கூட்டத்தில்தான் எட்டப்படும் எனத் திரும்பத் திரும்பத் தெரிவித்தன."எமது கூட்டமைப்பில், அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் மட்டத்தில் பொன்சேகாவையே ஆதரிப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டது. எனினும் நாடாளுமன்றக் குழுவில் அம்முடிவு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் வரை அதை வெளியிடுவதில்லை என்று தீர்மானித்திருக்கிறோம்.' எனக் கூட்டமைப்பின் தலைவர் ஒருவர் கூறினார். சரத் பொன்சேகாவை ஆதரிக்கும் முடிவைக் கூட்டமைப்பு எடுத்தாலும் கஜேந்திரகுமார், கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன், சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா ஆகியோர் அந்த முடிவை எதிர்ப்பதில் தீர்க்கமாக இருக்கின்றனர் எனத் தெரியவந்தது.தமிழ்க் கூட்டமைப்பின் நேற்றைய காலை அமர்வில் கஜேந்திரகுமார், பத்மினி சிதம்பரநாதன், கஜேந்திரன் ஆகிய எம்.பிக்கள் இந்தத் தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும் என வாதிட்டபோதும் அதை மறுத்து தமிழ் வேட்டபாளரான சிவாஜிலிங்கத்தை ஆதரிக்கும்படி ஸ்ரீகாந்தா வற்புறுத்தினார். எனினும் தமிழ் வேட்பாளரை ஆதரிக்கும் தனது திட்டத்துக்கு பிறரின் ஒத்துழைப்பு ஏதும் இல்லை என்பது அங்கு அவருக்கு ஓரளவு புரிந்தும், மாலையில் கூட்டத்துக்கு வந்து சேர்ந்து கொண்ட சிவாஜிலிங்கத்தையும் ஒன்று சேர்த்து, தேர்தலைப் பகிஷ்கரிக்க வேண்டும் என்ற அணிக்குத் தாவினார் ஸ்ரீகாந்தா எனக் கூறப்பட்டது.ஸ்ரீகாந்தா, சிவாஜிலிங்கம் போன்றோரின் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை வயதில் மூத்தவரான கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழுத்தலைவர் சம்பந்தன் பெரும் பொறுமையுடன் சகித்துக் கொண்டமை தம்மை ஆச்சரியத்தில் மூழ்கடித்தது என்றார் கூட்டத்தில் கலந்து கொண்ட மற்றொரு எம்.பி ஒருவர்."தம்மீது சுமத்தப்பட்ட வரலாற்றுப் பொறுப்பை எப்படியும் ஒப்பேற்றித் தமது இனத்துக்குரிய கடமையை செவ்வனே செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் இவ்வளவு அவமான, அவமதிப்புக்களையும் சம்பந்தர் பொறுமையாகத் தாங்கிக் கொண்டார் என நினைக்கிறேன்' என்றார் இந்த எம்.பி. "ஸ்ரீகாந்தா, சிவாஜிலிங்கம் போன்றோரை இந்தக் கூட்டத்துக்கு அனுமதித்த தமது தவறுக்காக அவர் இப்படி வாங்கிக் கட்டிக் கொண்டார்' என்றும் அந்த எம்.பி. கூறினார். "கூட்டமைப்பின் வரலாற்றுக் கடமையை இப்படிக் குழப்ப முயன்றவர்களை தமிழ் மக்கள் உரிய முறையில் கவனிப்பார்கள்' என்ற நம்பிக்கையையும் அவர் வெளியிட்டார்.இதற்கிடையில், சரத் பொன்சேகாவை ஆதரிக்கும் முடிவை தமிழ்க் கூட்டமைப்பு எடுத்தால், தமிழர்களுக்கு அது இழைத்த வரலாற்றுத் தவறாகிவிடும் என்றுஆளும் தரப்பு குறை சொல்லியிருக்கிறது. இந்த வரலாற்றுத் தவறுக்காகக் கூட்டமைப்பு பின்னர் அதிகம் வருந்த வேண்டியிருக்கும் என்று ஆளும் தரப்பின் தலைவர் ஒருவர் குறிப்பிட்டார். அவசரகாலச் சட்டத்தை நீடிக்கும் பிரேரணை குறித்து ஆராய்வதற்காக நாடாளுமன்றம் இன்று கூடவிருக்கையில் கூட்டமைப்பின் தீர்மானம் பற்றிய விவகாரம் அங்கு பெரும் சலசலப்பை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது..

ஞாயிறு, 3 ஜனவரி, 2010

Photo
பதவிக்கு வந்தால் பாதுகாப்பு வலயங்களை நீக்குவேன்: யாழ்ப்பாணத்தில் சரத் பொன்சேகா
[ சனிக்கிழமை, 02 சனவரி 2010, 04:53.35 PM GMT +05:30 ]
யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்டோர் மற்றும் காணாமல் போனோர் தொடர்பில், எதிர்வரும் ஜனவரி 27 ஆம் திகதிக்கு பின்னர், விசாரணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய அவர், நிரந்தரமாக காணாமல் போயிருப்போர் தொடர்பில் நட்டஈடுகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
அதேநேரம் யுத்தத்தின் முன்னரும் பின்னரும் பலர் கைது செய்யப்பட்டும் காணாமல் போயுமுள்ளனர். இவர்கள் பெயர், விபரங்கள் வெளியிடப்படும் என தெரிவித்த அவர், சரணடைந்த நிலையில் தமிழீழ விடுதலைப்புலிகள் எனக் கருதப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்படும் என குறிப்பிட்டார்.
யுத்தம் முடிவடைந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள அதியுயர் பாதுகாப்பு வலயங்களை வைத்திருப்பதனால் எவ்வித பயன்களும் இல்லை. எனவே தாம் ஆட்சிக்கு வந்தால் அந்த பாதுகாப்பு வலயங்கள் நீக்கப்படும். பலாலி அதியுயர் பாதுகாப்பு வலயத்தின் பல இடங்களிலும் விவசாய நடவடிக்கைகளுக்கு உரிய வகை செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இடம்பெயர்ந்துள்ள மக்கள் தொடர்பில் கருத்துரைத்த அவர், வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து மீண்டும் குடியமர்த்தப்படுகின்ற மக்களுக்காக வெளிநாட்டு உதவிகள் கிடைக்கின்ற போதும் அவர்களின் அடிப்படை வசதிகளைக்கூட அரசாங்கம் செய்துகொடுக்கவில்லை என குற்றம் சுமத்தினார்.
இதேவேளை.இந்த ஊடக மாநாட்டில் உரையாற்றிய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், வன்னி யுத்தத்தின் போது, மக்களால் வங்கிகளில் அடகு வைக்கப்பட்ட பல கோடி ரூபாய் பெறுமதியான நகைகள் மீட்கப்பட்டன. இவை உரியவர்களின் அடையாளங்களுடன் இருக்கின்ற போதும் அவற்றை ஏன் இன்னும் அரசாங்கம் உரியவர்களிடம் ஒப்படைக்கவில்லை எனக்கேள்வி எழுப்பினார்.
யாழ்ப்பாண மக்கள் தெற்கில் ஒரு ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கு முன்னதாக யாழ்ப்பாண வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற காணாமல் போனோர் மற்றும் கடத்தப்பட்டோரின் உறவினர்களுடனான சந்திப்பின் போது நூற்றுக்கணக்கான உறவினர்கள், கதறி அழுத காட்சியை காணமுடிந்ததாக யாழ்ப்பாண தகவல்கள் தெரிவிக்கின்றன.





PM
இ.தொ.கா.வின் பிளவும் த.தே.கூட்டமைப்பின் முடிவும் – பொன்சேகாவை வலுப்படுத்துமா? -இதயச்சந்திரன்புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் மனநிலையில் தமிழ் மக்கள் இல்லை. கடந்த ஆண்டு, யுத்தம் ஏற்படுத்திய தீராத ரணங்கள் இன்னமும் ஆறவில்லை. சிதறுண்டு போன குடும்பங்கள், அங்கங்களை இழந்த மனிதர்கள், மகனைத் தேடியலையும் தாய் தந்தையர், பேரினவாதச் சிறைக் கூடங்களில் முகவரி இழந்து தவிக்கும் இளைஞர்கள் என்று தமிழினம் சின்னாபின்னப்பட்டுப் போயுள்ளது.வடக்கு, கிழக்குத் தமிழர் தாயகத்தில் அதியுயர் இராணுவ பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்படவில்லை. தேர்தல் சலுகையாக, மீன் பிடித் தடை நீக்கமும், பாதை திறப்புக்களும் முன் வைக்கப்படுகின்றன.இயல்பு வாழ்வு திரும்பி விட்டதானதொரு கற்பிதம் உருவாக்கப்படுகின்றது. அவசரகாலச் சட்டமும், பயங்கரவாத தடைச் சட்டமும் நீக்கப்படவில்லை. சட்ட நீடிப்பிற்கான மாதச் சடங்கு மட்டும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுகிறது . கொழும்பில் நடைபெறுவது போன்று, காவல் துறையினரின் திடீர் தேடுதல் வேட்டைகளும் கைதுகளும் யாழ். குடாவில் இல்லை. வாக்கு வேட்டைக்காக அந்நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது போலிருக்கிறது.தென்னிலங்கைக் கைதுகள், சிங்கள வாக்காளர்களைக் கவரும் பேரினவாத உத்தி என்பதைப் புரிந்து கொள்ளலாம்.யுத்தத்தின் பக்க விளைவுகளை அகற்றுவதன் ஊடாக இதுதான் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் தலையாய பிரச்சினையென்று அரசாங்கம் கூற முற்படுகிறது.துரித கதியில் மீள்குடியேற்றம் நடைபெறுவதாக அரசாங்கம் தெரிவிப்பது, வெறும் தேர்தல் பிரசார உத்தி என சரத் பொன்சேகா கூறுவதால், கண்ணிவெடிக் கதையளந்து காலக்கெடு விதிக்க முடியாதென ஆட்சியாளர் மறுப்பறிக்கை விடுக்கின்றார்கள்.இதேவேளை, ஜெனரல் சரத் பொன்சேகாவை நேரில் பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. கூடும் கூட்டம் வேடிக்கை பார்க்க வந்த கும்பலா என்பதை தேர்தல் முடிவுகளே தீர்மானிக்கும்.இ.தொ.கா.வின் உடைவோடு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சரத்திற்கு ஆதரவளித்தால் கணிசமான தமிழர் வாக்குகளை அன்னப் பறவை பெற்று விடுமென ஐக்கிய தேசிய முன்னணி எதிர்பார்க்கிறது.பாலையும் நீரையும் வெவ்வேறாகப் பிரிக்கும் வல்லமை கொண்ட அந்தப் பறவை, இலங் கைத் தொழிலாளர் காங்கிரஸில் தனது வாய் வரிசையைக் காட்டி விட்டது.இ. தொ. கா.விலிருந்து வெளியேறிய அதன் தேசிய அமைப்பாளர் ஆர். யோகராஜனும், பிரதிக் கல்வி அமைச்சர் சச்சிதானந்த னும் ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சியில் சங்க மமாகியுள்ளனர்.நூற்றுக்கு மேற்பட்ட தடவை கூடிய, சர்வ கட்சி கூட்டு என்றழைக்கப்படும் ஆளும் தரப்பினரின் ஒன்று கூடலில் எந்த அர்த்தமும் இல்லை என்பதோடு வடக்கு கிழக்கு மக்களுக்கு அதிகாரப் பகிர்வு தேவையற்றதென மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் எண்ணுவதாக ஆர். யோகராஜன் தெரிவிக்கின்றார்.பேராசிரியர் திஸ்ஸ விதாரண, அந்த அறிக்கையை வெளியிடாமல் இருப்பதால், அதன் நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் கொள்ள வேண்டிய அவசியம் இவர்களுக்கு இருப்பதை உணரலாம்.அதேவேளை, இவர்கள் இருவரின் வெளியேற்றம் தொடர்பாக, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் அச்சமடைகிறாராம்.தேர்தல் காலத்தில், கட்சி மாறுவதென்பது, முதலாளித்துவ முறைமையின் ஜனநாயகப் பண்பு என்பதனை மனோ கணேசன் புரிந்து கொள்ள வேண்டும்.எதிர்காலத்தில் அதிகார வர்க்கமாக வரக் கூடியவருடன், கூட்டிணைவதில் அடிப்படைக் கொள்கைகள், அறம் சார்ந்த பொறுப்புகள் எதுவுமே கருத்தில் கொள்ளப்படுவதில்லை.ஆனாலும் சர்வ கட்சிக் கூட்டமென்பது தமிழ் மக்களையும் சர்வதேசத்தையும் ஏமாற்றுவதற்காக நடத்தப்பட்ட ஒரு கண்கட்டு வித்தை என்பதை அதில் கலந்து கொண்டவர் ஏற்றுக் கொள்ளும் போது, அங்கு மக்களுக்கான செய்தி சொல்லப்படுவதை கருத்தில் கொள்ள வேண்டும்.மலையக மக்களை வாக்கு வங்கி மந்தைகளாகக் கருதும், தனிப் பெரும் தலைமைகளுக்கு, இப்பிளவு ஒரு பேரிடியாகவே இருக்கும். கை காட்டும் இடத்தில் புள்ளடி போடும் அரசியல் மரபினை மலையக மக்கள் மாற்ற வேண்டிய காலச் சூழல் உருவாகி வருவதை உணரக் கூடியதாகவிருக்கிறது.அதேவேளை, சரத் பொன்சேகாவிற்கு ஆதரவளிக்குமாறு, சர்வதேசப் புலிகள், சம்பந்தனுக்கு அழுத்தம் கொடுப்பதாக ஜே.வி.பி.யிலிருந்து பிரிந்து சென்று தேசிய சுதந்திர முன்னணியை உருவாக்கிய விமல் வீரவன்ச அதிரடிச் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.இன்னமும் புலிகள் இல்லாமல் அரசியல் செய்ய முடியாதென்கிற கையறு நிலையில் பேரினவாதம் இருப்பதை விமலின் கூற்று புலப்படுத்துகிறது.2005 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தவறான முடிவே, அவர்களின் அழிவிற்கு காரணியாக அமைந்து விட்டதென சம்பந்தன் கூறும் இந்தியக் கருத்தியலிற்கு, விமல் வீரவன்ச எதிர்வாதம் புரிகிறார்.சரத் பொன்சேகாவை ஆதரிக்கும் முடிவினை மேற்கொண்டால், புலிச்சாயம் பூச, விமல் வீரவன்ச போன்றோர் முற்படுவார்களென்பதை புரிந்து கொள்வதால், புலி எதிர்ப்பு விமர்சனங்களை முன்கூட்டியே தெரிவிக்கும் உத்தியினை, சம்பந்தன் மேற்கொள்வது போல் தெரிகிறது.இவைதவிர, தமது தலைமையின் பின்னால் தமிழ் மக்கள் அணிதிரண்டு உள்ளார்கள் என்கிற அந்த நம்பிக்கையும் சம்பந்தன் அவர்களுக்கு உண்டு.ஆனாலும் வடக்கு, கிழக்கு தாயகத்தில் ஆயுதம் தாங்கிய குழுக்கள் இல்லாத ஜனநாயகச் சூழல் குறித்த எதிர்பார்ப்பொன்றே மக்களிடம் காணப்படுகிறது. ஆயுதக் குழுக்களோ, இராணுவத்தினரின் பிரசன்னமோ இல்லாத சூழ்நிலையொன்று உடனடியாக உருவாக்கப்பட வேண்டுமென்பதே இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நீண்ட காலமாகவே வாழ்ந்து வரும் தமிழ், முஸ்லிம் மக்களின் பேரவாவாக இருக்கிறது.அரசியல் தீர்வு குறித்து விடுதலைப் புலிகள் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளிலும் இயல்பு வாழ்வின் மீள் வரவிற்கே முன்னுரிமை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.இவை தவிர, யாழ். மாநகர சபைத் தேர்தல் காலத்தில் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது ஜனாதிபதித் தேர்தல் குறித்தும் தமது தொலைநோக்குப் பார்வை கலந்த செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க வேண்டாமென்று கூறுவதோ அல்லது சுயேச்சையாக போட்டியிடுவதோ புத்திசாலித்தனமல்ல என்கிற வகையில் செயலாளர் ஸ்ரீரங்கனின் பார்வை அமைந்துள்ளது.போட்டியிடுவதும், வாக்களிப்பதும் மக்களின் ஜனநாயக உரிமை சார்ந்தது. இதில் புத்திசாலித்தனமென்பது இராஜதந்திரம் சார்ந்ததாக இருக்க வேண்டும். இது தமிழ் மக்களுக்கான அரசியல் களமல்ல, என்பதற்கும் அப்பால், தெரிவு செய்யப்படும் நபர், நிறைவேற்று அதிகாரம் கொண்ட முழு இலங்கையையும் ஆளக்கூடிய அதிகாரம் கொண்டவர் என்பதை புரிந்து கொள்ளலாம்.அத்தோடு இரண்டு பிரதான வேட்பாளர்களையும் ஆட்டுவித்து இயக்கும் பிராந்திய, மேற்குலக ஜாம்பவான்களுக்கு இடையே நிகழும் கடலாதிக்க யுத்தம் இதுவென்பதை உணர்ந்தால் போதும்.இன்று சமுத்திரக் கடற் பிராந்தியம், வணிகப் போக்குவரத்திற்கு எந்தளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை சோமாலிய கடற்கொள்ளையர்கள் அடிக்கடி நிரூபித்து வருகின்றனர்.சீனச் சரக்கு கப்பலொன்று கடத்தப்பட்ட விவகாரம், இப் பிராந்தியத்தில் தனக்கான கடற்படைத் தளமொன்று இருக்க வேண்டியதன் அவசியத்தை சீனாவிற்கு உணர்த்துகிறது.இதில் சீனாவிற்கு இரண்டு தெரிவுகள் உண்டு. அண்மையில் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் (ஆச்டூணிஞிடடிண்tச்ண) கரையோரத்தில் அமைந்துள்ள “குவாடர்’ இல் (எதீச்ஞீச்ணூ) வர்த்தக துறைமுகமொன்றை நிர்மாணித்தது. அதனை ஒரு சிங்கப்பூர் கம்பனி நிர்வகிக்கிறது.ஆனாலும் அப்பிரதேசத்தில் பலுச் விடுதலைப் போராட்டம் நிகழ்வதால் கடற்படைத் தளமொன்று அங்கு நிறுவுவது பாதுகாப்பானதாக அமையாதென சீனா கருதுகிறது.ஆகவே, ஹம்பாந்தோட்டையில் தமது ஆதரவில் நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நவீன வர்த்தக துறைமுகத்தினை அண்டிய பகுதிகளில் சீனக் கடற்படைத் தளமொன்றை அமைப்பதே சீன தேசத்தின் இறுதித் தெரிவாக இருக்கலாம்.இவ்வாறான நகர்வு ஏற்பட முன் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட தனக்குச் சார்பான அதிகாரவாசிகளை ஆட்சியிலமர்த்தும் நட வடிக்கையில் இந்தியா நிச்சயம் இறங்கும். ஆனாலும் இன அழிப்பினை மேற்கொண்டு, தமிழரின் வாழ்வினை பிறப்புரிமைப் போராட்டத்தைச் சின்னாபின்னமாக்கிய பேரினவாத அரசியலையும், அதன் துணை இராணுவக் குழுக்களையும் இவற்றையெல்லாம் தூக்கி நிறுத்திய இந்தியாவையும் தோற்கடிக்கக் கூடிய ஒரு சந்தர்ப்பத்தை இத்தேர்தல் வழங்குகிறது.மாணவர் ஒன்றியம் விதந்துரைக்கும் புத்திசாலித்தனத்தை, இராஜதந்திரச் செயற்பாடாக மாற்றுவதில் சில நெருடல்கள் உருவாகும். ஆனாலும் அதனையும் உடைத்துக் கொண்டு வெளியேறும் அரசியல் ஆளுமை தமிழ் மக்களுக்கு உண்டென நம்பலாம்.சரத்தை ஆதரிப்பதால், இழப்பதற்கு ஏதுமில்லையென இரா. சம்பந்தன் கருதலாம். ஆழமாக உற்று நோக்கினால், 2005 தேர்தலில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட சரியான முடிவின் மறுபக்கத்தையே சம்பந்தன் புரட்டி வாசிக்கப் போகின்றார்.நன்றி – வீரகேசரி வாரவெளியீடுhttp://meenakam.com/?p=1826
ரணில், சரத் பொன்சேகாவிற்கு எதிராக குமரன் பத்மநாதன் அறிக்கை வெளியிடவுள்ளார் : லக்பிம
ரணில், சரத் பொன்சேகாவிற்கு எதிராக குமரன் பத்மநாதன் அறிக்கை வெளியிடவுள்ளார் : லக்பிம
[ ஞாயிற்றுக்கிழமை, 03 சனவரி 2010, 04:29.27 AM GMT +05:30 ]
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா ஆகியோருக்கு எதிரான வகையில் குமரன் பத்மநாதன் அறிக்கை வெளியிட உள்ளதாக லக்பிம பத்திரிகை செய்தி வெளியிடடுள்ளது.
குறித்த இருவருக்கும் பாதிப்பு ஏற்படக் கூடிய வகையில் புலிகளின் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் விரைவில் ஊடகங்களின் ஊடாக அறிக்கை வெளியிடுவார் என குறிப்பிடப்படுகிறது. எதிர்க்கட்சி வேட்பாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருக்கு எதிராக குமரன் பத்மநாதன் வெளியிட உள்ள தகவல்கள் தொடர்பில் விரைவில் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செலயாளர் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமா என்பது தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணி ஆராய்ந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.






[ ஞாயிற்றுக்கிழமை, 03 சனவரி 2010, 04:29.27 AM GMT +05:30 ]
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா ஆகியோருக்கு எதிரான வகையில் குமரன் பத்மநாதன் அறிக்கை வெளியிட உள்ளதாக லக்பிம பத்திரிகை செய்தி வெளியிடடுள்ளது.
குறித்த இருவருக்கும் பாதிப்பு ஏற்படக் கூடிய வகையில் புலிகளின் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் விரைவில் ஊடகங்களின் ஊடாக அறிக்கை வெளியிடுவார் என குறிப்பிடப்படுகிறது. எதிர்க்கட்சி வேட்பாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருக்கு எதிராக குமரன் பத்மநாதன் வெளியிட உள்ள தகவல்கள் தொடர்பில் விரைவில் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செலயாளர் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமா என்பது தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணி ஆராய்ந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.



'

Photo
இலங்கை அரசுக்கெதிரான செய்மதி படச்சான்றுகளுடன் போர்க் குற்றச்சாட்டு முன்வைக்கப்படவுள்ளது
[ ஞாயிற்றுக்கிழமை, 03 சனவரி 2010, 03:39.38 AM GMT +05:30 ]
இலங்கை அரசாங்கம் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதற்கான செய்மதி படங்களுடனான சான்றுகள் அமெரிக்காவை தளமாகக்கொண்ட குழுவினால் சர்வதேச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அமெரிக்காவை தளமாகக்கொண்ட தமிழர் படுகொலைகளுக்கு எதிரான அமைப்பு இந்த முனைப்பில் ஈடுபட்டுள்ளது.
எதிர்வரும் 14 ஆம் 15 ஆம் திகதிகளில் டப்ளினில் அமைந்துள்ள சர்வதேச நீதிமன்றம் கூடவுள்ளது.
இதன்போது, கடந்த வருடம் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வன்னியில் வைத்தியசாலைகளின் மீது நடத்தப்பட்ட எறிகனை தாக்குதல்கள் தொடர்பிலான நான்கு செய்மதிப்படங்களை அமெரிக்கக்குழு சமர்ப்பிக்கவுள்ளது.
1907 ஆம் ஆண்டின் ஹேக் உடன்படிக்கை 1948 ஆம் ஆண்டின் ஜெனீவா உடன்படிக்கை என்பவற்றில், வைத்தியசாலைகள் போன்ற மருத்துவ நிலையங்கள் மீதான தாக்குதல்கள் தடைசெய்யப்பட்டுள்ளன என்ற அடிப்படையிலேயே இந்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படவுள்ளன.
படங்களுக்கு இங்கே சொடுக்கவும்
படங்களுக்கு இங்கே சொடுக்கவும்