ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள்; சின்னங்கள்; வாக்காளர்கள் தொகை விபரம்
[ செவ்வாய்க்கிழமை, 05 சனவரி 2010, 01:37.40 PM GMT +05:30 ]
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மொத்தமாக 22 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக தோ்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் வேட்பாளர்களின் பெயர்கள்,அவர்களின் சின்னங்கள் அடங்கிய விபரங்களையும் வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள், சின்னங்கள் விவரம் 01. ஐதுருஸ் மொஹமட் இல்லியாஸ் - அன்னாசி 02. மொஹமட் ஹாசிம் மொஹமட் இஸ்மாயில் - கழுகு 03. விக்கிரமபாகு கருணாரத்ன – மேசை 04. உபாலி சரத் கோன்கஹே - கேட் 05. சன்ன ஜானக சுகத்சிறி கமகே – முயல் 06. சிறிதுங்க ஜயசூரிய – முச்சக்கர வண்டி 07. விஜே டயஸ் - கத்தரிக்கோல் 08. முத்துபண்டார தெமினிமுல்ல – உண்டியல் 09. சேனாரத்ன த சில்வா – கொடி 10. அருண த சொய்சா – மோட்டார் கார் 11. சனத் பின்னதுவ - இரட்டைச் செடிகள் 12. லால் பெரேரா – தொலைபேசி 13. சரத் பொன்சேகா – அன்னம் 14. சரத் மனமேந்திர – வில்லும் அம்பும் 15. மொஹமட் முஸ்தபா – தொப்பி 16. டபிள்யு.வி.மஹிமன் ரஞ்சித் - அலுமாரி 17. மகிந்த ராஜபக்ஷ - வெற்றிலை 18. பனாகொட தொன் பிரின்ஸ் சொலமன் அநுர லியனகே – கங்காரு 19. உக்குபண்டா விஜேகோன் - பலாப்பழம் 20. எம்.கே.சிவாஜிலிங்கம் - கப்பல் 21. பத்தரமுல்லே சீலரத்ன தேரர் – உழவு இயந்திரம் 22. அச்சல அசோக சுரவீர – தேங்காய் அதேவேளை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மொத்தமாக 14,088,500 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாகத் தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கில் இடம்பெயர்ந்த மக்களைப் பதிவு செய்யும்போது குறிப்பிட்ட சிலரின் பெயர் இருதடவை பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும் அது தற்போது திருத்தப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் அறிவித்துள்ளது. மாவட்ட ரீதியாக வாக்களிக்கத் தகுதி பெற்றோரின் எண்ணிக்கை வருமாறு : கொழும்பு மாவட்டம் 1,521,854 கம்பஹா மாவட்டம் 1,474,464 களுத்துறை மாவட்டம் 813,233 கண்டி மாவட்டம் 970,456 மாத்தளை மாவட்டம் 342,684 நுவரெலியா மாவட்டம் 457,137 காலி மாவட்டம் 761,815 மாத்தறை மாவட்டம் 578,858 அம்பாந்தோட்டை மாவட்டம் 421,186 யாழ். மாவட்டம் 721,359 வன்னி மாவட்டம் 266,975 மட்டக்களப்பு மாவட்டம் 333,644 திகாமடுல்ல மாவட்டம் 420,835 திருகோணமலை மாவட்டம் 241,133 குருணாகல் மாவட்டம் 1,183,649 புத்தளம் மாவட்டம் 495,575 அநுராதபுரம் மாவட்டம் 579,261 பொலன்னறுவ மாவட்டம் 280,337 பதுல்ல மாவட்டம் 574,814 மொனராகல மாவட்டம் 300,642 இரத்தினபுரி மாவட்டம் 734,651 கேகாலை மாவட்டம் 613,938
செவ்வாய், 5 ஜனவரி, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக