THAMILEELAM

லேபிள்கள்

எனது வலைப்பதிவு பட்டியல்

சனி, 30 அக்டோபர், 2010

பிரதான செய்திகள்
நுரைச்சோலையில் சீனர்கள் கைகலப்பு: ஒருவர் மருத்துவமனையில் அனுமதி
[ 2010-10-30 13:27:29 ] []
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த சீனர்கள் தங்களுக்குள் மோதிக் கொண்டதில் ஒருவர் காயங்களுடன் புத்தளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். [மேலும்]
ஐ நாவின் சிறிலங்கா மீதான போர்க்குற்ற விசாரணையில் எங்களையும் சேர்த்துக் கொள்வோம்!
[ 2010-10-30 02:02:34 ]
சிங்கள தேசம் தமிழர் இனப்படுகொலையை மிக வெற்றிகரமாக நடாத்தி முடித்திருக்கின்றது. கைகளை பின்புறமாகக் கட்டியும், காலால் உதைத்தும், கதறக்கதற பாலியல் வல்லுறவையும், உயிருடனே கூரிய ஆயுதங்களால் வெட்டியும், தடைசெய்யப்பட்ட நச்சு ஆயுதங்களால் எம்மவர்கள் கொல்லப்பட்டதும், தொலைக்காட்சியிலும் இணையங்களிலும் நாம் கண்ட காட்சிகளாகும். [மேலும்]
பிந்திய செய்திகள்
நீதிமன்றம் தொடர்பான நம்பிக்கை தகர்க்கப்பட்டுள்ளது: ஐ.தே.க
[ 2010-10-30 15:10:12 ]
இலங்கையில் நீதிமன்றம் தொடர்பான நம்பிக்கை தகர்க்கப்பட்டுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. [மேலும்]
வடக்கு காணி உறுதிகளை புலிகள் அழித்துள்ளனர்: திவயின தகவல்
[ 2010-10-30 15:03:42 ]
வடக்கு காணி உறுதிகளை தமிழீழ விடுதலைப் புலிகள் அழித்துள்ளதாக திவயின சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா போன்ற பிரதேசங்களின் காணி அலுவலகங்களில் காணப்பட்ட தரவுகளை புலிகள் அழித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
செய்திகள்
ஜனாதிபதியையும், அரசாங்கத்தையும் விமர்சிப்பவர்களை கண்ட இடத்தில் கைது செய்ய இரகசிய உத்தரவு
[ சனிக்கிழமை, 30 ஒக்ரோபர் 2010, 12:56.59 PM ]
அரசாங்கத்தையும், ஜனாதிபதியையும் விமர்சிப்பவர்களை கண்ட இடத்தில் கைது செய்யுமாறு நேற்றைய தினம் இலங்கையின் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் இரகசிய சுற்றுநிருபம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களத்திலிருந்து கிடைக்கும் நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. [மேலும்]
மட்டக்களப்பில், நஞ்சருந்தி வயோதிபர் பலி! சடலம் பொலிஸாரினால் மீட்பு
[ சனிக்கிழமை, 30 ஒக்ரோபர் 2010, 11:35.39 AM ]
மட்டக்களப்பு கல்லடி கடற்கரையோரத்தில் வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். [மேலும்]
அனைத்து பல்கலைக்கழக மாணவர் குழுவினர் மனோ கணேசனுடன் சந்திப்பு: தமிழ் மாணவர்கள் துன்புறும்பொழுது தென்னிலங்கை அமைப்புகள் குரல் எழுப்பவில்லை என சுட்டிக்காட்டு
[ சனிக்கிழமை, 30 ஒக்ரோபர் 2010, 11:15.24 AM ] []
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தூதுக்குழுவினர் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனை முன்னணியின் தலைமையகத்தில் இன்று முற்பகல் சந்தித்து கலந்துரையாடினர். [மேலும்]
காணாமற்போய் ஒரு வருடம் கடந்த அனைவருக்கும் இறப்பு அத்தாட்சி பத்திரம்: பொது நிர்வாக அமைச்சு
[ சனிக்கிழமை, 30 ஒக்ரோபர் 2010, 11:00.42 AM ]
காணாமற்போய் ஒரு வருடத்துக்கு மேலாக உயிர் வாழ்வதான எந்தத் தகவலும் இல்லாதவர்கள் அனைவரும் மரணமடைந்ததாகக் கருதி இறப்பு அத்தாட்சிப் பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவிக்கின்றது. [மேலும்]
இலங்கை அனைத்து இன மக்களினதும் அபிலாசைகளைப் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும்: அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம்.
[ சனிக்கிழமை, 30 ஒக்ரோபர் 2010, 10:53.58 AM ]
இலங்கையில் உள்ள அனைத்து இன மக்களினதும் அபிலாசைகளைப் புரிந்து கொண்டு முன்னேற்ற இலக்குகளை அடைவதற்கு முன்னுரிமையளிக்கப்பட வேண்டுமென அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவிக்கின்றார். [மேலும்]
அமைச்சர் மைத்திரிபாலவுக்கு அடிபணியத் தயாராகின்றார் ஜனாதிபதி.?
[ சனிக்கிழமை, 30 ஒக்ரோபர் 2010, 10:37.05 AM ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சர்வாதிகாரப் போக்குகளில் அதிருப்தியுற்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்களுடன் இணைந்து எதிர்ப்பியக்கமொன்றை ஸ்தாபிக்க அமைச்சர் மைத்திரிபால முயன்று வருவது குறித்த தகவல் வெளியானவுடன் ஜனாதிபதிக்கு வயிற்றைக் கலக்கியுள்ளதாக தகவல்கள் கசிகின்றன. [மேலும்]
விஜயகலா மகேஷ்வரன் அரசாங்கத்துடன் இணையப் போகின்றார்
[ சனிக்கிழமை, 30 ஒக்ரோபர் 2010, 10:33.32 AM ]
ஐ.தே.க.வின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஷ்வரன் மிக விரைவில் அரசாங்கத் தரப்புடன் இணைந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் அடிபடுகின்றன. [மேலும்]
முன்னாள் புலி உறுப்பினர் ஒருவர் சிங்களத் திரைப்படமொன்றின் கதாநாயகன் ஆகின்றார்
[ சனிக்கிழமை, 30 ஒக்ரோபர் 2010, 10:12.22 AM ]
முன்னாள் புலி உறுப்பினராகவிருந்து, புனர்வாழ்வு பெற்ற சாந்தலிங்கம் கோகுல் ராஜா என்ற இளைஞர் சிங்களத் திரைப்படமொன்றின் கதாநாயகனாக நடிக்கும் வரம் பெற்றுள்ளார். [மேலும்]
ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த மற்றும் விற்பனை செய்த 13 பேர் கைது
[ சனிக்கிழமை, 30 ஒக்ரோபர் 2010, 08:35.43 AM ]
புத்தளத்தில் ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த மற்றும் விற்பனை செய்த 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மூன்று இடங்களில் நடத்தப்பட்ட விசேட தேடுதல் வேட்டையின் போது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். [மேலும்]
கொழும்பில் இருந்து வயிற்றில் விழுங்கி தங்கம் கடத்திச் சென்றவர் சென்னையில் கைது
[ சனிக்கிழமை, 30 ஒக்ரோபர் 2010, 08:11.17 AM ]
கொழும்பில் இருந்து சென்னைக்கு சென்ற விமானத்தில் 20 லட்சம் ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுக்களை வயிற்றில் விழுங்கிய நிலையில் கடத்திச் சென்ற இந்திய இளைஞர் ஒருவரை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்தனர். [மேலும்]
தற்காலிக முகாம்களில் உள்ள மக்கள் நிலையான முகாம்களுக்கு நகருமாறு இராணுவம் கோரிக்கை
[ சனிக்கிழமை, 30 ஒக்ரோபர் 2010, 05:01.35 AM ]
தற்போது தங்கியிருக்கும் நலன்புரி நிலையங்களிலிருந்து வெளியேறி வேறு முகாம்களுக்கு நகர்ந்து செல்லுமாறு இடம்பெயர் மக்களிடம் இராணுவத்தினர் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
நாங்கள் சிறுபான்மை இனமில்லை! ஒரு தேசிய இனம்!! நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் பேச்சு
[ சனிக்கிழமை, 30 ஒக்ரோபர் 2010, 05:01.05 AM ]
சிறுபான்மை மக்கள் என்று எவரும் இந்த நாட்டில் இல்லை என்று ஜனாதிபதி ராஜபக்ச அடிக்கடி கூறிவருகின்றார். உண்மையில் அது உளப்பூர்வமாக சொல்லப்பட்டதென்றால் மகிழ்ச்சிக்குரியது. ஆனால் அதைச் சொன்னவர்களே பின்னர் சிறுபான்மைத் தமிழர்கள் என்று உச்சரித்தார்கள். [மேலும்]
ஹிட்லரின் ஆட்சியையே இலங்கை அரசு இன்று கடைப்பிடிக்கின்றது: மங்கள
[ சனிக்கிழமை, 30 ஒக்ரோபர் 2010, 04:37.40 AM ]
சர்வாதிகாரியான ஹிட்லர் 1933ஆம் ஆண்டு என்ன செய்தாரோ அவை அனைத்தையும் படிப்படியாக இன்று இலங்கை அரசும் செய்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். [மேலும்]
இறுதி மாணவன் கைது செய்யப்படும் வரையில் எமது போராட்டம் தொடரும்: பல்கலை.ஒன்றியம்
[ சனிக்கிழமை, 30 ஒக்ரோபர் 2010, 04:15.01 AM ]
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளரைக் கைதுசெய்திருப்பதன் மூலம் ஒன்றியத்தின் செயற்பாடுகளை நிறுத்திவிடலாமென்றோ அல்லது மாணவர்களை அச்சுறுத்தி விடலாமென்றோ அரசாங்கம் நினைத்துவிடக் கூடாது. இறுதி மாணவனும் கைதுசெய்யப்படும் வரையில் எமது போராட்டம் தொடரும் என்று ஒன்றியத்தின் பதில் தலைவர் ராஜீவ பண்டார தெரிவித்துள்ளார். [மேலும்]
வன்னி மக்கள் இராணுவத்தினரின் சேவைகளையே விரும்புகின்றனர் என்கிறார் ஆணைக்குழு தலைவர்
[ சனிக்கிழமை, 30 ஒக்ரோபர் 2010, 03:56.10 AM ]
வவுனியா மற்றும் வன்னி மக்கள் அங்கு இராணுவத்தினர் மேற்கொள்ளும் சேவையை விரும்புகின்றனர். சிவில் நிர்வாகத்தை அந்தளவு விரும்பவில்லை என்று கற்றறிந்த பாடங்களும் தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் தலைவரும் முன்னாள் சட்டமா அதிபருமான சி.ஆர்.டி. சில்வா தெரிவித்தார். [மேலும்]

திங்கள், 18 அக்டோபர், 2010

blog-post_07.html
http://eelavarkural.blogspot.com/2010/10/blog-post_07.html