THAMILEELAM

லேபிள்கள்

எனது வலைப்பதிவு பட்டியல்

வியாழன், 31 டிசம்பர், 2009

அர்ச்சகர் செய்த திருவிளையாடகள்

ஸ்ரீபெரும்புதூர், டிச .30
காஞ்சீபுரம் மச்சேரஸ்வர் கோவிலின் கருவறையில் பல பெண்களுடன் செக்ஸ் லீலைகளில் ஈடுபட்டதாக அர்ச்சகர் தேவநாதன் மீது சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து தேவநாதன் காஞ்சீபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் சரண்டைந்தார். போலீசார் 5 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

அர்ச்சகர் தேவநாதன் காஞ்சீபுரம் பகுதியைச் சேர்ந்த பல முக்கிய வி.ஐ.பி. பெண்களிடம் கோவில் கருவறை, லாட்ஜ் மற்றும் சம்பந்தப்பட்ட பெண்களின் வீடுகளில் செக்சில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இது தொடர்பான வழக்கு சிவகாஞ்சி போலீசாரிடமிருந்து காஞ்சீபுரம் மாவட்ட குற்றவியல் போலீசுக்கு அதிரடியாக மாற்றப்பட்டது.

டி.எஸ்.பி. விஜயராகவன் தலைமையில் 3 இன்ஸ்பெக்டர்கள், 3 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் பெண் போலீசார் கொண்ட தனிப்படை இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகிறது.

இந்த வழக்கை போலீசார் விசாரிக்க ஆரம்பித்த உடனே இதில் சம்பந்தப்பட்ட பெண்கள் அனை வரும் தலைமறைவு ஆனார்கள். போலீசார் தீவிர விசாரணை நடத்தி அர்ச்சகர் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்தனர். காஞ்சீபுரம் பூக்கடை சத்திரம் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் மனைவி மீரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணும் மற்றும் பூ வியாபாரம் செய்யும் நீலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆகியோர் தேவநாதன் வசியம் மருந்து கொடுத்து மயங்கி கோவில் கருவறையில் வைத்து கற்பழித்து விட்டதாக பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

3 நாட்களுக்கு முன் அர்ச்சகர் தேவநாதனை போலீசார் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று ஆண்மை பரிசோதனை செய்தனர். தற்போது தேவநாதன் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் காஞ்சீபுரம் பகுதியைச் சேர்ந்த மேலும் 2 பெண்கள் போலீசாரிடம் தேவநாதன் தன்னை கற்பழித்து விட்டதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

போலீசார் அந்த 2 பெண்களிடமும் ரகசியமாக பெண் போலீசாரின் உதவியுடன் விசாரணை செய்து வருகின்றனர். அதில் ஒருவர் திருமணம் ஆகாத இளம்பெண். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று தெரிய வந்துள்ளது.
எனவே செக்ஸ் அர்ச்சகர் தேவநாதனுக்கு எதிரான வழக்கு தற்போது வலுப்பெற்று வருகிறது.

ஐ.தே.க. பிரபலம் கைதாவாரா.

சரத் பொன்சேக்காவின் பௌத்த சமய விவகார இணைப்பாளரை கைதுசெய்யுமாறு காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேக்காவின் பௌத்த சமய விவகார இணைப்பாளர் ஊவதென்னே சுமணதேரரை உடனடியாக கைதுசெய்து அவசரகால சட்டத்தின் கீழ் ஜனாதிபதித் தேர்தல் நிறைவடையும் வரைத் தடுத்து வைக்குமாறு காவல்துறைமா அதிபர் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் பிரதி காவல்துறை மா அதிபர் சந்திரா விநிஸ்டிற்கு உத்தரவிட்டுள்ளதாக காவல்துறை தலைமையகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சரத் பொன்சேக்காவிற்கு ஆதரவு வழங்கும் 28 பிரதான நபர்களை பயங்கரவாதத்திற்கு ஆதரவு வழங்கினார்கள் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யுமாறு பாதுகாப்புச் செயலாளர் காவல்துறை மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார். இதனடிப்படையில், தம்பர அமில தேரர், மருதானை சுதுவெல்ல பிரதேசத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் கித்சிறி ராஜபக்~ ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தற்போது கைதுசெய்ய உத்தரவிடப்பட்டுள்ள ஊவதென்னே சுமணதேரர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிக்குப் பிரிவு செயற்பாட்டாளர் ஆவார். அத்துடன், அவர் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரண்ணாகொடவிற்கு நெருக்கமானவர். ஜனாதிபதியின் நெருங்கிய உறவினரான திசர சமரசிங்கவை கடற்படைத் தளபதியாக நியமிப்பதற்காக கரண்ணாகொடவை அந்தப் பதவியிலிருந்து விலகச் செய்யும் முனைப்புகளில் ஜனாதிபதிக்கும் கரண்ணாகொடவிற்கும் இடையிலான இணைப்பு நடவடிக்கைகளை ஊவதென்னே சுமண தேரரே மேற்கொண்டிருந்தார்.
இவ்வாறு செயற்பட்ட சுமணதேரர் ஜெனரல் சரத் பொன்சேக்காவிற்கும் கரண்ணாகொடவிற்கும் இடையில் நிலவும் ஒருதசாப்த கோபதாபங்களை சுமுக நிலைக்குக் கொண்டுவருவதற்காக தலையிட்டமை காரணமாகவே ஜனாதிபதி ஆத்திரமடைந்துள்ளார்.
அதேவேளை, சுயாதீன தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் ஒருவரைத் தாக்கியதாகக் கூறி ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினரான ரோஹன தினபுரன என்பவர் நேற்றிரவு இரகசிய காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அதேபோல், சரத் பொன்சேக்காவின் ஊடக இணைப்பாளரான அசங்க மாகெதரவின் வீட்டிற்கு நேற்றிரவு சென்ற இரகசிய காவல்துறையினர் அவரது செயற்பாடுகள் குறித்து பெற்றோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
.

வானொலி வவுனியாவில் கருணாவின் ஆட்கள்

வவுனியா பிரதேச வானொலியில் கருணாவிற்கு ஆதரவான அறிவிப்பாளர்கள் திணிக்கப்பட்டுள்ளனர்
வவுனியாவில் ஒளிபரப்பாகிவரும் வானொலி அறிவிப்பாளர்களாக பணியாற்றிவரும் கூட்டுத்தாபன ஊழியர்களை விலகுமாறு அச்சுறுத்தியுள்ள கருணா தனக்கு ஆதரவான அறிவிப்பாளர்களை பணியில் அமர்த்தி அந்த வானொலியை தனக்குரிய வானொலிச் சேவையாக மாற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து அறிவிப்பாளர்கள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தலைவரிடம் முறைப்பாடு செய்துள்ளனர். எதிர்வரும் ஜனவரி 26ம் திகதி வரை தன்னால் எதுவும் செய்ய முடியாது என கூட்டுத்தாபனத் தலைவர் கூறியுள்ளார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில ஆயுதக் குழுக்கள் இயங்கி வருகின்றன. இந்த ஆயுதக் குழுக்கள் அரசாங்கத்தின் அரசியல்வாதிகளின் அனுசரணையுடன் செயற்பட்டு வருகின்றன. இந்த நிலைமையில் அந்தப் பகுதிகளில் பணியாற்றும் அரச ஊழியர்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் புதிய ஹோட்டல்

டில்கோ ஜஃப்னா சிட்டி ஹோட்டல்’ 80 மில்லியன் ரூபா செலவில் யாழ். நகரில் சுற்றுலா ஹோட்டல்
வடக்கில் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் திட்டத்திற்கமைய யாழ். நகரில் 33 அறைகளைக் கொண்ட ‘டில்கோ ஜஃப்னா சிட்டி ஹொட்டேல்’ என்ற சுற்றுலா ஹோட்டல் 2010 ஆம் ஆண்டு திறக்கப்படவுள்ளதாக முதலீட்டுச் சபையின் தலைவர் தம்மிக்க பெரேரா தெரிவித்தார்.
சுமார் 80 மில்லியன் ரூபா முதலீட்டு டன் கட்டப்பட்டு வரும் இந்த ஹோட்டல் 2010 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் திறக்கப்படவுள்ளதாக டில்கோ நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் தவராஜா திலகராஜா தெரிவித்துள்ளதாகவும் தம்மிக்க பெரேரா தினகரனுக்குத் தெரி வித்தார்.
கடற்கரையையும், கடலேரி யையும் அண்டியுள்ள பகுதியில் சுமார் 340 பேர்ச்சஸ் பரப்பளவில் கட்டப்பட்டு வரும் டில்கோ ஜப்னா சிட்டி ஹோடேல் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர், வர்த்தக சமூகத்தினர் மற்றும் சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் சகல வசதிகளையும் கொண்டதாக அமையவிருப்பதாகவும் தம்மிக்க பெரேரா தெரிவித்தார்.
இலங்கை முதலீட்டு சபையில் இதற்கான ஒப்பந்தம் அண்மையில் கைச்சாத்தானது. முதலீட்டுச் சபையின் தலைவர் தம்மிக்க பெரேராவும், டில்கோ நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் தவராஜா திலகராஜாவும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
வீரசிங்கம் மண்டபத்தை அண்மித்ததாக கட்டப்பட்டு வரும் ‘டில்கோ ஜப்னா சிட்டி ஹோட்டேல்’ திறக்கப்பட்டதும் மேலும் உல்லாசப் பயணத்துறை சார்ந்த ஹோட்டல்களுக்கான முதலீடுகள் செய்யப்படவுள்ளன என்றும் தம்மிக்க பெரேரா தெரிவித்தார்..

திங்கள், 28 டிசம்பர், 2009

முள்ளிவாய்க்கால் நடந்தது என்ன

முள்ளிவாய்க்காலில் வைத்து வேலுப்பிள்ளை பிரபாகரன் சிங்களத்திற்கு வைத்த இறுதியும் அறுதியுமான செக் என்ன?

இன்று பிரபாகரன் தனது தனது தீர்க்கதரிசனத்தின் சாய்வுகளையும் சறுக்கல்களையும் மீறி எமது விடுதலையை ஒரு முக்கியமான கட்டத்தில் கொண்டு வந்து விட்டிருக்கிறார். தானும் “மறைந்து” தனது குடும்பத்தினரையும் தளபதிகள், போராளிகள் அவர்களின் குடும்பத்தினர் என்று இந்த போராட்டத்தை மூன்று தசாப்தங்களாகத் தாங்கிய அனைவரையும் காவு கொடுத்து ஒரு இனப்படுகொலையின் -இனச்சுத்திகரிப்பின் சாட்சிகளாக மடிந்திருக்கிறார்கள்.

இனம், நிலம், மொழி, பண்பாடு என்ற அடிப்படையில் தமிழன் அழித்தொழிப்புக்குள்ளானதை நிறுவி எமது தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற அரசியல் கனவை நிறைவேற்றுமாறு சொல்லிவிட்டு “மறைந்திருக்கிறார்”. இதன் பின்னணியில் இதற்கு ஒரு சர்வதேச அங்கீகாரம் இருக்கிறது.

இந்த அடிப்படையில் பார்த்தால் அவர் “மறைந்தும்” சிங்களம் அவரின் நிகழ்ச்சி நிரலுக்குள்ளேயே சிக்கி சுழல்வதுபோல்தான் தெரிகிறது. இது முள்ளிவாய்க்காலில் வைத்து பிரபாகரன் சிங்களத்திற்கு வைத்த “இறுதியும்” அறுதியுமான “செக்” என ஈழம் இ நியூசிற்கு வழங்கிய பிரத்தியோக நேர்காணலில் எட்வேட் ரமாநந்தன் (வியன்னா பல்கலைக்கழகம்), பரணி கிருஸ்ணரஜனி (பாரிஸ் பல்கலைக்கழகம்), யாழினி ரவிச்சந்திரன் (ஒக்ஸ்போட் பல்கலைக்கழகம்), சித்ரலேகா துஸ்யந்தன்(வியன்னா பல்கலைக்கழகம்), பிரியதர்சினி சற்குணவடிவேல்(பர்சிலோனா பல்கலைக்கழகம்) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

நேர்காணலின் இறுதிப்பகுதி (ஐந்தாவது) வருமாறு:

கேள்வி: முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பின் தேக்கமடைந்திருக்கும் எமது போராட்டம் – அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாக உடனடியாகச் செய்யப்பட வேண்டியவையாக நீங்கள் எவற்றைக் கருதுகிறீர்கள்?

பதில்: நீங்கள் திரும்பவும் பழைய கேள்விகளுக்கே திரும்புகிறீர்கள் என்று நினைக்கிறோம். நாம் மீண்டும் மீண்டும் ஒரே விடயத்தையே வலியுறுத்த விரும்புகிறோம். முள்ளிவாய்க்காலில் வைத்து நாம் இராணுவ – அரசியல் ரீதியாக மட்டும் தோற்கடிக்கப்படவில்லை. எமது நிலம், இனம், மொழி சார்ந்து சமூக, பண்பாட்டு, உளவியல், பொருளாதார, வாழ்வியல் ஆதாரங்கள் எல்லாம் அழித்தொழிக்கப்பட்டது.

இது சாதாரணமானதல்ல. ஒரு சமூகத்தை நிலம், இனம், மொழி என்பவற்றை மையப்படுத்தி அதன் சமூக, பண்பாட்டு, உளவியல், பொருளாதார, வாழ்வியல் ஆதாரங்களை அழிப்பதென்பதுதான் அந்த இனத்தைப் பொறுத்த வரையில் அதன் அரசியல் அழிப்பு என்பதாகவிருக்கிறது. எனவே மேற்படி ஆதாரங்களை மீண்டும் கண்டடைவதும் அதை மீளொழுங்கு செய்வதிலும்தான் எமது அரசியல் அடையாளம் இருக்கின்றது. எனவே எமது அடுத்த கட்ட நடவடிக்கைகள் எல்லாம் இவற்றை மையப்படுத்தியே இருக்க வேண்டும்.

கேள்வி: உங்களுடைய மேற்படி செய்திகளை நாம் கவனமாக உள்வாங்கிக் கொண்டோம். இதன் தர்க்கம் எமக்குப் புரிகிறது. இருந்த போதிலும் பழைய கேள்விகளினூடாகவே மேற்படி தர்க்கம் குறித்த சில மேலதிக விளக்கங்களைப் பெற விரும்புகிறோம். தற்போதைய ஈழத்தமிழ் சூழலில் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை முன்மொழிகிறார்கள். தனிமனிதர்களாக, குழுக்களாக, அமைப்புக்களாக ஒன்றுக்கொன்று முரண்பாடானவையாக அவை இருக்கின்றன. முரண்பாடுகளைக்கூட ஏற்றுக்கொள்ளலாம்.

ஆனால் அவை வரும்காலத்தில் எந்தப் புள்ளியிலும் சந்திக்கும் போல் தெரியவில்லை. புலத்திலும் சரி தாயகத்திலும் சரி இச் செயற்பாடுகள் தனி ஆவர்த்தனங்களாக சூழலுக்குப் பொருத்தமற்றவையாக, தர்க்கங்களுக்கு அப்பாற்பட்டவையாக, ஒவ்வாமை செயற்திட்டங்களாக அவை இருக்கின்றன.

தமது செயற்பாடுகளை முதன்மைப்படுத்த இதன் சில பிரிவினர் மறு தரப்பு மீது காழ்ப்புக்களையும் குரோதங்களையும் வன்முறையாக வெளித்தள்ளவும் தொடங்கிவிட்டனர்.பரஸ்பரம் இது நடக்கிறது. அவதூறு, கொலை மிரட்டல், அச்சுறுத்தல் என்று அது ஒரு மோசமான வடிவத்தை அடைந்து கொண்டிருக்கிறது. பேரழிவைச் சந்தித்து வாழ்விழந்து நடைப் பிணங்களாகியிருக்கும் எமது மக்கள் இவற்றைக் கண்டு மேலும் பீதியுற்றுருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. இப்புற யதார்த்தத்தின் அடிப்படையிலேயே நாம் மேற்படி கேள்வியை முன்வைத்தோம்…

பதில்: உங்களுடைய கேள்விகளையும் அதன் பின்னுள்ள அவலத்தையும் எம்மால் புரிய முடிகிறது. முள்ளிவாய்க்கால் படுகொலைகளையும் அது நடந்தேறிய விதத்தையும் உன்னிப்பாக அவதானித்தவர்களாக எமக்கு அது குறித்து ஒரு வாசிப்பு இருக்கிறது. அந்த வாசிப்பு தந்த பதட்டமும் பீதியுமே எங்களை உங்கள் முன் பேச வைத்துக்கொண்டிருக்கிறது. முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் தொடர்ச்சி எமது இனத்திற்குள் மேற்படி முரணாக வெடிக்கும், பல ஒவ்வாமைகளை உருவாக்கும் என்பதை நாம் முன்பே கண்டறிந்தோம். அதன் நடப்பு வரலாறுதான் உங்கள் கேள்விகளாக எங்கள் முன் கிடக்கிறது. எமது பதட்டத்தின் பீதியின் பின்புலமும் இதுதான்.

உளவியல் பின்புலத்தினூடாகவே மேற்படி கேள்விகளை அணுக வேண்டும். நாம் முள்ளிவாய்க்காலில் வைத்து அழிக்கப்பட்டதாகக் கூறும் முதன்மைக் கூறுகளில் ஒன்றாக எமது உளவியலும் இருக்கிறது. அத்தோடு நாம் உடனடியாக மீளொழுங்கு செய்ய வேண்டிய விடயமாகவும் இது இருக்கிறது.

உண்மையிலேயே உடனடியாகச் செய்யப்பட வேண்டிய எமது ஒருமித்த செயற்பாடு என்பது சரணடைந்த போராளிகளை உடனடியாக விடுவிப்பதற்கு முயற்சிப்பதும் எமது விடுதலைக்காகத் தம்மை முழுமையாக அர்ப்பணித்து மரணித்தவர்கள் போக எஞ்சியுள்ள மாவீரர், போராளி குடும்பங்களை உளவியல் சிதைவிலிருந்து காப்பதும் அவர்களின் பொருளாதார வாழ்வை மேம்படுத்துவதுமே ஆகும்.

இந்தத் தொடர்ச்சி போரில் சிக்குண்ட வன்னி மக்கள் பின்பு முழு தாயக மக்கள் என்று விரிவாக்கம் செய்யப்பட வேண்டும். ஆனால் இங்கு யாரும் இது குறித்து அக்கறைப்படுவதாகவே தெரியவில்லை. மாறாக எல்லோரும் அரசியல் செய்யக் கிளம்பியிருக்கிறார்கள். இதை நாம் குற்றச்சாட்டாக முன்வைக்கவில்லை. இது முள்ளிவாய்க்கால் படுகொலைகளை சந்தித்து எஞ்சியுள்ளவர்களின் உளவியல் சிதைவின் அடையாளமாகவே நாங்கள் பார்க்கிறோம். இச் சிதைவே மேற்படி முரணாக எம்மைப் பிளவுபடுத்தியிருக்கிறது.

குற்றங்களின் மூலமும் அடிப்படையும் மனச்சிதைவிலிருந்து அல்லது மனப் பிறழ்விலிருந்துதான் தோற்றம் கொள்வதாக உளவியல்வாதம் கட்டமைக்கப்படுகிறது. இந்த அடிப்படையில்தான் நீங்கள் சுட்டிக்காட்டியிருக்கும் பல தரப்பினரதும் வன்முறையையும் அவதூறு, கொலை மிரட்டல், அச்சுறுத்தல்களையும் நாம் பார்க்கிறோம்.

முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பிறகு மேற்படி அரசியல் செய்யும் ஒவ்வொரு தரப்பும் தம்மளவில் தாம் செய்ய முற்பட்டிருக்கும் அரசியலே சரியானது என்று எண்ணத் தலைப்பட்டிருக்கிறார்கள். மற்றவர்கள் இன்னொரு அழிவுக்குக் கொண்டே விட்டு விடுவார்கள் என்று நம்பவும் தொடங்கிவிட்டார்கள். சாத்தியம், பொருத்தப்பாடு, தர்க்கம், அறம் எதுவும் இவர்களை இயக்கவில்லை.

சிதைந்துபோன உளவியலே இவர்களை இயக்கிக் கொண்டிருக்கிறது. இதை வேறு ஒரு மொழியில் கூறினால் முள்ளிவாய்க்காலில் வைத்துப் பேரழிவுடன் குருரமான முறையில் வீழத்தப்பட்ட எமது போராடத்தினது தோல்வியும் அவலமுமே இவர்களின் அரசியல் மையமாக இருக்கிறது. தலைவர் பிரபாகரன் மீதான விடுதலைப்புலிகள் மீதான சேறடிப்புக்களின் அவதூறுகளின் மையமாகவும் இந்த ஊனமுற்ற உளவியலே இயங்கிக் கொண்டிருக்கிறது. ஊனமுற்ற உளவியலிலிருந்து முழுமையான அரசியல் பிறக்க முடியாது. இது சந்தாப்பபவாத, அடிபணிவு, அவல அரசியலின் ஒரு வடிவமாகவே இருக்க முடியும்.

முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பிறகு தாயகத்திலும் சரி புலத்திலும் சரி அரசியல் செய்யப் புறப்பட்டிருக்கும் எல்லோருமே விதிவிலக்கில்லாமல் இந்த வாய்ப்பாட்டிற்குள் பொருந்திப் போகிறார்கள். இந்த அரசியல் ஆரோக்கியமானதல்ல.

நாங்கள் தோற்கடிக்கப்பட்டது உண்மை. பெரும் அவலம் நிகழ்ந்ததும் உண்மை. விளைவாக மக்கள் போராட்டத்திலிருந்து வெகுதூரம் சென்றுவிட்டதும் உண்மை. அதற்காக இவற்றை மையப்படுத்தி எமது எதிர்கால அரசியலைத் தீர்மானிக்க முடியாது. வரும்கால சந்ததிக்கு இந்த அவல அடிபணிவு அரசியலிலிருந்து எதுவுமே கிடைக்கப்போவதில்லை.

இது ஒரு வரலாற்றுத்தவறாக மாறிவிடும். வரும்காலத்தில் இன்று இந்த அவல அடிபணிவு அரசியலை கையெலெடுத்தவர்களின் வாரிசுகளே அவர்களை நோகவேண்டித்தான் ஏற்படும். “தம்மை முள்ளிவாய்க்காலில் வைத்து சிங்களவன் கதற கதற கொன்றான் என்பதற்காக எங்களை அடிமைகளாக இருக்கிற மாதிரி அரசியலமைப்பை மாத்திப்போட்டு போய்விட்டர்களோ” என்று அந்த சந்ததி கதறப்போவதும் விளைவாக ஆயுதப் போராட்டத்தை கையிலெடுப்பதும் ஒரு தொடர்ச்சியாக இருக்கப்போவதே யதார்த்தம். அடுத்த சந்ததிக்கு இதைக் கடத்துவது ஆபத்தானது.

கேள்வி: அப்படியென்றால் அரசியல் நடவடிக்கைகள் எதுவும் செய்யாமல் பேசாமல் இருக்கச் சொல்கிறீர்களா?

பதில்: இதற்கு பதிலளிப்பது கொஞ்சம் சிக்கலானது. மனம் திறந்து உண்மையைச் சொல்வதென்றால் கொஞ்ச நாளைக்குப் பேசாமல் இருப்பதுதான் நல்லது. முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடந்து முடிந்து ஒரு சில வாரங்களிற்குள் புலிகளையும் தலைவர் பிரபாகரனையும் விமர்சித்து எமது அடுத்த கட்ட அரசியல் எப்படி இருக்க வேண்டும் என்று விளித்து புலிகள் அமைப்போடு வன்னியில் இணைந்து பணியாற்றிய ஒருவர் எழுதிய கட்டுரை என்ற குறிப்போடு தமிழக சிற்றிதழ் ஒன்று ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது. அதற்கு நாம் அப்போதே எமது கண்டனத்தை தெரிவித்திருந்தோம். அக்கட்டுரைக்கு நாம் அளித்த பதில்தான் இதற்கும் பதிலாக இருக்க முடியும்.

முள்ளிவாய்க்கால் படுகொலைகளுடன் எமது உரிமைப் போராட்டமும் எங்களின் எதிர்காலமும் மோசமான வரலாற்று காலகட்டத்திற்குள் பிரவேசித்திருப்பது ஒன்றும் ரகசியமானதல்ல. வெளிப்படையானது. எல்லாக் கணிப்புகளும் மதிப்பீடுகளும் கனவுகளும் கலைந்துபோனது மட்டுமல்ல, யூகித்திருக்கவே முடியாத கொடூரங்களுடன் மரண ஓலங்களும் கதறல்களுமாக முள்ளிவாய்க்கால் படுகொலைகள் அரங்கேற்றப்பட்ட காட்சிப் பதிவிலிருந்து இன்னும் முழுமையாக ஈழத்தமிழன் ஒருவனும் மீண்டுவிடவில்லை. முழுமையாக மீள முடியுமா என்பதும் தெரியவில்லை. என்றென்றைக்கும் மீளவே முடியாத கொடுங்கனவாக ஒவ்வொரு ஈழத்தமிழனது மனஅடுக்குகளை இக்காட்சிப் பதிவுகள் நிறைத்தபடியே இருக்கும்.

இந்தப் பின்புலத்திலிருந்துதான் ஈழவிடுதலை குறித்த அடுத்த கட்ட அரசியலை வளர்த்துச் செல்ல முடியும். நாம் மேற்படி அரசியல் செய்பவர்கள் எல்லோரையும் விமர்சித்துவிட்டு நாமும் முள்ளிவாய்க்கால் படுகொலையிலிருந்துதான் அரசியல் செய்ய வேண்டும் என்று சொல்வதாகத் தவறாகக் கருத வேண்டாம்.

நாம் அதை கவனத்தில் கொள்ள வேண்டுமேயொழிய அதை நிரந்தரத் தோல்வியாகவும் நிரந்தர அவலமாகவும் கவனத்தில் கொண்டு அவல அடிபணிவு அரசியலை கையிலெடுக்க வேண்டாம் என்றுதான் கூறுகிறோம். உணமையைச் சொல்வதென்றால் உடனடியாக நாம் அரசியல் செய்யக்கூடிய புறசுசூழலோ யதார்த்தமோ இல்லை.

உண்மையிலேயே கடந்தகால நிலைப்பாடுகள், அது தொடர்பான அரசியல் நடவடிக்கைகள், அதன் விளைவான சரி தவறுகள் சார்ந்து சுயவிமர்சனமும் மீள்பார்வையும் இங்கு அவசியமாகிறது. முள்ளிவாய்க்காலிலிருந்து பீறிட்ட குருதி இன்னும் காய்ந்துவிடவில்லை. அதன் மணம் இன்னும் நாசியை அடைத்தபடியே இருக்கிறது. இந்த நிலையில் சுயபிரக்ஞையுடன் கடந்த காலத்தை உடனடியாக மறுஆய்வு செய்வதென்பதும் கடினமானது.

இதற்கு ஒரு காலநீட்சி தேவை. அந்த இடைப்பட்ட காலமே ஈழவிடுதலைப் போராட்டம் குறித்த பிரக்ஞைபூர்வமான, தெளிவான மறுவாசிப்பை எமக்குத் தரும். நாம் எல்லோருமே பெரும் உளவியல் சிதைவுக்குள்ளாகியிருக்கிறோம். இந்த மனநிலையில் தெளிவான அரசியல் கட்டமைப்பை ஒன்றிணைந்து உருவாக்க முடியாது.

இந்த “உடனடி” நடவடிக்கைகள் இன்னுமொரு மனிதப் பேரவலத்திற்கும் அரசியல் வறுமைக்கும் ஈழத்தமிழினத்தை இட்டுச்செல்லக் கூடாது என்பதே நமது பெரும் கவலையாகவிருக்கிறது.

தமிழீழ விடுதலைப்போராட்டம் தோற்கடிக்கப்பட்டதில் சிறீலங்கா மட்டத்தில் மட்டுமல்ல உலகளவிலும் நிறைய இராஜதந்திரங்களும் அரசியல் சாணக்கியத்தனங்களும் நிறைந்திருக்கிறது. இதை பலர் மறந்து பிதற்றுகிறார்கள். முள்ளிவாய்க்காலில் வைத்து புலிகள் தோற்கடிக்கப்பட்டதை வரலாறு புலிகளின் தோல்வியாக என்றைக்கும் பதிவு செய்யாது.

இத் தோல்வியை தமிழர்களின் இராஜதந்திரத் தோல்வியாகவே

வரலாறு பதிவு செய்யும். எனவே எமது அடுத்த கட்டத்தைத் தீர்மானிப்பதில் கொஞ்சம் கவனம் தேவை. உடனடியாக அரசியல் செய்யப் புறப்பட்டு நாம் கண்டது என்ன? பல பிரிவுகளாக முரண்பட்டு பிளவுற்று அவதூறுகளையும் காழ்ப்புக்களையும் குரோதங்களையும் வன்முறைகளாக வெளித்தள்ளியதுதான் மிச்சம். இந்த அடிப்படையில்தான் அரசியலைச் சற்று ஒதுக்கிவிட்டு மக்கள் பிரச்சினையில் கவனத்தைக் குவிக்குமாறு தொடர்ந்து கூறிவருகிறோம்.

ஒற்றை அணுகுமுறை இல்லாமல் பல பிரிவுகளாக அரசியல் செய்வது நல்லதுதான். இதுதான் பன்மைத்துவத்திற்கு வழி சமைக்கும். அடிப்படை ஜனநாயகத்திற்கு வழி கோலும். ஆனால் அது இங்கு அவதூறு வன்முறை அரசியலுக்குத்தான் வழி சமைத்திருக்கிறது. தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற அமைப்பும் பிரபாகரன் என்ற நாமமும் தமிழர் வரலாற்றிலிருந்து என்றைக்கும் துடைத்தழிக்க முடியாதது. இதைக் கவனத்தில் கொண்டு வரையப்படும் அரசியல் வரைபடமே ஈழவிடுதலைக்கான வழியைக் காட்டும்.

மாற்றுக் கருத்துகளுக்குரிய ஒரு தெளிவான ஜனநாயகச் சூழல் ஈழ அரசியல் சூழலில் உடனடியாக உருவாக்கப்பட வேண்டும். புலிகளின் பின்னடைவை அடுத்து நாம் தொடர்ச்சியாக முன்வைக்கும் கருத்து இதுதான். அதுவே முரண்பாடுகளற்ற ஒரு தெளிவான அரசியல் தலைமைத்துவத்தை உருவாக்கும். முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பின்னான ஈழத்தமிழினத்தின் தீர்க்கமான அரசியல் தீர்வு இதன் வழியேதான் பிறப்பெடுக்கும் – சேறடிப்புகளினூடாகவும் அவதூறுகளினூடாகவும் அது என்றைக்கும் பிறப்பெடுக்க முடியாது.

கேள்வி: தற்போதைய நிலையில் எம்மிடையே இருக்கும் பிளவுகளைப் பாக்கும் போது நீங்கள் சொல்வது சரிபோல்தான் தெரிகிறது. ஆனால் நாங்கள் காலம் வரட்டும் என்று மௌனமாக இருக்க எங்களை ஒரேயடியாக சிங்களம் துடைத்தழித்துவிடாதா?

பதில்: எமது பதிலை நீங்கள் தவறாகப் புரிந்துகொள்கிறீர்கள் என்று நினைக்கிறோம். கால நீரோட்டம் எமக்கான அரசியலை அடையாளம் காட்டும். வரலாறு ஒரு போதும் ஓரிடத்தில் தேங்கி நின்று விடுவதில்லை. அப்படி ஒரு காலகட்டத்தை நாங்கள் இப்போது நெருங்கி விட்டோம் என்றே நம்புகிறோம். சிறீலங்காவின் அதிபர் தேர்தல் அறிவிப்பும் அதையொட்டி இனப்படுகொலையின் இரு சூத்திரதாரிகள் எதிர் வேட்பாளர்களாக மாறியிருப்பதும் முள்ளிவாய்க்காலிற்கு பி;ன்னான எமது அரசியலின் முக்கியமான கட்டம். இந்த இடத்தில் நாம் ஒரு அரசியலைச் செய்ய முடியும்.

புலிகளின் தோல்விக்கு எமது தரப்பிலேயே ஆயிரம் வியாக்கியானங்கள் கற்பிக்கப்படுகின்றன. அதில் முதன்மையானது புலிகள் மாறிவரும் உலக ஒழுங்கைக் கவனத்தில் கொள்ளவில்லை என்பதும் அதன் நிமித்தமாக 2001 புரிந்துணர்வு உடன்படிக்கையை அடுத்து ஆயுதத்தை கீழே போட்டுவிட்டு சரணடைந்திருக்க வேண்டும் என்றெல்லாம் வாய்க்கு வந்த வாதமெல்லாம் வைக்கப்படுகிறது. வீங்கிப் பெருத்த மூளைகளை வைத்து “பிரேதப் பரிசோதனை” அறிக்கை தயார் செய்து கொண்டிருக்கிறார்கள் மேற்படி அதிமேதாவிகள்.

இதையெல்லாம் ஒரு வாதத்திற்கு சரி என்றே வைத்துக்கொள்வோம். மாறிவரும் உலக ஒழுங்கைக் கவனத்தில் கொள்ளும், உலக அரசியல் வரைபடத்தைக் கிரமமாக உள்வாங்கிய அதிமேதவிகள் ஏன் சிறிலங்கா அதிபர் தேர்தலின் கனதியைப் புரிந்து கொள்ளவில்லை.

ஆயுதப் போராட்டம் இனி சாத்தியமே இல்லை என்று அடித்து சத்தியம் செய்யும் இவர்கள் இலங்கைத் தீவில் தமிழர்களின் அரசியல் தீர்விற்கு எதை முன்மொழிய விரும்புகிறார்கள். சந்தர்ப்பவாத, அடிபணிவு, அவல அரசியலில் ஒரு இனத்தையே முழுமையாகப் சிக்க வைத்து குழி தோண்டிப் புதைக்க விரும்புகிறார்கள். அத்துடன் பிரபாகரனை கொடுங்கோலனாக்கிச் “சாகடிப்பதற்குத்தான்” உலக ஒழுங்கிலிருந்து உள்ளுர் ஒழுங்கு வரை இழுக்கிறார்களே ஒழிய வேறொன்றுமில்லை.

சிலர் சொல்கிறார்கள் அதிபர் தேர்தலைப் புறக்கணிக்கச் சொல்லி. வேறு சிலரோ மகிந்த ராஜபக்ச அவர்களுக்கே வாக்களிக்க வேண்டும் என்று. இவை கூடப் பரவாயில்லை. வேறு சிலர் சொல்வதுதான் சினத்தை மூட்டுகிறது. நாம் எமது ஒற்றுமையை உலகுக்கு உணர்த்த ஒரு தமிழ் வேட்பாளாரை நிறுத்த வேண்டும் என்று. இன்று உலகிலேயே உள்ள அயோக்கியத்தனமான சொல்லாடல் ஒன்றென்றால் “ஈழத்தமிழர் நாம் ஒற்றுமையாக இருக்கிறோம்” என்பதுதான். நாங்கள் ஒற்றுமையாக இருந்து புலிகளைக் காலைவாரியது காணும்.

நாம் முன்பே குறிப்பிட்டது போல் தமிழீழ விடுதலைப்போராட்டம் தோற்கடிக்கப்பட்டதில் சிறீலங்கா மட்டத்தில் மட்டுமல்ல உலகளவிலும் நிறைய இராஜதந்திரங்களும் அரசியல் சாணக்கியத்தனங்களும் நிறைந்திருக்கிறது. இப்போது பந்து எம்மிடம். நாம் ஒற்றுமையாக இருந்து அரசியல் ரீதியாக தேர்தலின் வழி -ஜனநாயகத்தின் அடிப்படையில் இதை எதிர்கொள்வதென்பது நம்மை நாமே ஏமாற்றுவதுபோலானது.

நாமும் இராஜதந்திரங்களின் அடிப்படையில் சாணக்கியத்தனங்களை பிரயோகிக்க வேண்யடியதுதான். எம்மை அழித்தவனுக்கு வாக்களிப்பதா என்ற வாதம் எல்லாம் இங்கு எடுபடாது. நாங்கள் வெளிப்படையாகவே சொல்கிறோம். சரத்பொன்சேகாவுக்கு நாம் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். மகிந்தவின் வாக்கு வங்கியை உடைப்பதற்கு நாம் என்ன அரசியல் எல்லாம் செய்ய முடியுமோ செய்ய வேண்டியதுதான்.

முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் வழி ஒருமித்த ஏகாதிபத்தியமாய் திரண்டிருந்த சிங்களம் இப்போது இரண்டாய் உடைந்திருக்கிறது. நாம் கனவில்கூட இப்படியொரு நிகழ்வு நடைபெறும் என்று நினைக்கவில்லை. இதை நாம் எமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதில் மகிந்ததான் எமது முதன்மையான எதிரி. மகிந்த தமது பதவியை இழக்கும்போது எமக்கு கிடைக்கப்போகும் இராஜதந்திர அனுகூலங்கள் மிக முக்கியமானவை.

தற்போதையை அரசியல் நிலவரப்படி அதிபர் தேர்தலில் மகிந்தவிற்குப் பாதகமான முடிவுகள் கிடைக்குமாயின் இனப்படுகொலையின் சூத்திரதாரிகளான மகிந்தவும் அவரது சகோதரர்களும் சரத் பொன்சேகாவால் கைது செய்யப்படலாம் அல்லது நாட்டை விட்டு வெளியேற்றப்படலாம் அல்லது அவர்களாகவே வெளியேறலாம் என்ற பலவகையான கருத்துக்கள் உலா வருகினறன. எது நடந்தாலும் நமக்கு அது ஆதாயம்தான். அத்தோடு தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வீழ்ச்சிக்கு துணை நின்ற டக்ளஸ், கருணா போன்றவர்களும் சரத் பொன்சேகாவின் இலக்குகளாக மாறியிருக்கிறார்கள். இவாகள் இருவரில் குறிப்பாக கருணா நாட்டை விட்டு தப்பியோடலாம் அல்லது சரத் பொன்சேகாவால் கைது செய்யப்படலாம் அல்லது கொல்லப்படலாம் என்றே ஆருடம் கூறப்படுகிறது. எதிரிகளை கொண்டே எதிரிகளை அழிக்கும் சூழ்ச்சி தமிழர்களுக்கு ஒரு வாய்ப்பாகக் கிடைத்திருக்கிறது.

எனவே சரத் பொன்சேகா என்ற எமது ஒற்றை எதிரியை வெல்லச் செய்வதன் மூலம் எமது பல எதிரிகளை நாம் வெளியேற்றுகிறோம். ஒரு வகையில் எமது அடுத்த கட்ட அரசியலுக்குள் கால் எடுத்து வைக்கிறோம் என்றுதான் சொல்லவேண்டும்.

எங்களுக்கு ஒன்று புரியவேயில்லை. நாம் சிறீலங்கா என்ற தேசத்துடன் சேர்ந்து வாழ முடியாது என்று கூறி தமிழீழம் என்ற ஒரு நிலப்பரப்பை எமக்கானதாக வரையறுத்து தனி நாடு கேட்டுப் போராடியவர்கள். சிறீலங்கா என்ற தேசத்தின் அதிபர் தேர்தலில் நாம் ஒரு தமிழ் வேட்பாளரை நிறுத்துவது எவ்வளவு அபத்தம். இது எமது நீண்ட கால போராட்டத்தை – அதன் நியாயத்தை நீர்த்துபோக செய்யும் முயற்சி.

நாம் இனி ஒரு ஆயுதப்போராட்டத்தை நடத்த முடியாது என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவு உண்மை சிறீலங்கா என்ற தேசத்திற்குள் நாம் எமக்கான தனித்துவ அரசியலையும் செய்ய முடியாது. ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்து விட்டது பேசித் தீர்ப்போம் என்று சொல்பவர்கள் இதைக் கவனத்தில் கொண்டது மாதிரியே தெரியவில்லை.

எமக்கு இருக்கிற ஒரே வழி முள்ளிவாய்க்கால் படுகொலைகள் போர்க்குற்றங்களின் வழி நடந்தேறிய இனப்படுகொலைகள் என்பதையும் அது ஒரு இனச்சுத்திகரிப்பு என்பதையும் இந்த உலகுக்கு நிருபிப்பதுதான். உலகுக்கு அது தெரியாது என்றல்ல. அவர்கள் கண்முன்னால்தான் இந்தப் படுகொலைகள் நடந்தேறின. பிராந்திய – பூகோள அரசியலின் ஒரு விளைவும் மௌனமும் அது. இப்போது அதே பிராந்திய -பூகோள அரசியல் சிறீலங்காவிற்கு எதிராகத் திரும்பியிருக்கிறது. நாம் இதை கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும்.

எமது அடுத்த கட்ட அரசியல் என்பதே இந்த இனப்படுகொலையை அம்பலப்படுத்துவதும் அதன் மூலம் எமக்கான நியாயத்தை சர்வதேசத்திடம் கோருவதுமாகும். இப்போதைய பூகோள அரசியல் எமது கருத்தை செவிமடுப்பதற்குத் தயாராக இருக்கிறது. இனம், நிலம், மொழி, பண்பாடு என்ற அடிப்படையில் நாம் அழித்தொழிப்புக்குள்ளானதை நிறுவுவோமானால் எமது தாயகம், தேசியம், சுயநிர்ணயம் குறித்த எமது அரசியல் கனவு நிறைவேறும்.

முன்பே குறிப்பிட்டதைப் போல் உலகுக்கு இது தெரியாததல்ல ஆனால் தற்போது ஆதாரங்களை எதிர்பார்க்கிறார்கள். ஆதாரங்களை இந்த அதிபர் தேர்தலினூடாக இனப்படுகொலையின் சூத்திரதாரிகளே வழங்கத்தயாராகி வருகிறார்கள். நாம் அதற்கு வழி சமைத்து கொடுத்தால் மட்டும் போதுமானது. ஆயுதமும் தூக்கத் தேவையில்லை. மக்களிடம் நிதியும் திரட்டத் தேவையில்லை. இறுதி இலக்கை நோக்கி நாம் நகர்த்தப்பட்டுக்கொண்டிருக்கிறோம். இப்போது யாரும் உதவி செய்யத்தேவையில்லை. உபத்திரவம் செய்யாமல் இருந்தாலே போதும்.

சரத் பொன்சேகா வெல்லும்போது அவரது நடவடிக்கைகள் இயல்பாகவே ஒரு இராணுவ தோற்றத்தைக் கொடுக்கும். அவர் பதவியைத் துறந்து தேர்தலின் அடிப்படையில் தெரிவு செய்யபப்ட்டாலும் உலகத்தைப் பொருத்தவரையில் ஒரு இராணுவ ஜெனரலின் ஆட்சி நடைபெறும் தேசமாகவே சிறீலங்கா பார்க்கப்படும். இந்த அடிப்படையே எமக்கு போர்க்குற்றம், இனப்படுகொலை தொடர்பான சார்பான விளைவுகளை உருவாக்கும். அவரே முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் பங்குதாரர்களில் ஒருவர் என்பது எமக்கு மேலதிக அனுகூலங்களைக் கொடுக்கும். அதிபர் தேர்தல் எமக்கு கற்றுத்தருகிற தெளிவான அரசியல் இது.

இப்போதே போதுமான அளவு ஆதாரங்களை சரத்பொன்சேகா வழங்கிவிட்டார். வரும் நாட்கள், தேர்தலின் தோல்வி மறுதரப்பிடமிருந்தும் பல உண்மைகளை வரவழைக்கும். நாம் அவற்றை சேகரித்து உலக அரங்கை நோக்கிக் கொண்டு நகாத்துவதில்தான் எமது எதிர்காலமே இருக்கிறது. ஆனால் நாம் குண்டுச் சட்டிக்குள் குதிரையோடிக்கொண்டிருக்கிறோம். போதாதற்கு எமக்கு நாமே குழிபறிப்பதிலேயே காலத்தையும் கடந்து செல்கிறோம்.

நாம் முன்பே கூறியது போல் நாம் ஒன்றும் செய்யத் தேவையில்லை. “inner city press” இதை தூசி தட்டி கேள்விக்கணைகளைத் தொடுக்கத் தொடங்கி விட்டது. “channel four” ஏற்கனவே வெளியான இனப்படுகொலை ஆதார ஒளிப்பிரதியை உண்மையானது என ஆதாரபூர்வமாக நிருபித்திருக்கிறது.

ஐநாவிற்கும் சிறீலங்கா அதிகாரிகளுக்குமிடையில் அறிக்கைப் போர் தொடங்கிவிட்டது. இது வரும் நாட்களில் விரிவாக்கம் பெறும். நாம் செய்ய வேண்டியது மீண்டும் மக்களை வீதியில் இறக்குவதும் அவர்களுக்கு “குண்டுசட்டி” அரசியல் செய்பவர்கள் உபத்திரவம் தராமல் இருப்பதுமாகும். மீதியை வரலாறு எழுதும்.

கேள்வி: இதை தலைவர் பிரபாகரனின் நிகழ்ச்சி நிரலுக்குள் சிங்களம் வந்து சேர்ந்து விட்டது என்ற வரையறுக்கலாமா…..?

பதில்: அப்படித்தான் நாங்கள் கருதுகிறோம். புலிகளின் தோல்விக்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஈழச்சூழலில் புலிகளை ஆதரித்தவர்கள் பலர் இன்று அந்த தோல்விக்கு புலிகளையும் தலைவர் பிரபாகரனையும் காரணமாகக் காட்டும் அபத்தம் எல்லாம் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. ஆனால் ஈழச்சூழலுக்கு வெளியில் உலக அளவில் ஆரோக்கியமான முறையில் புலிகளின் பின்னடைவு விரிவாக ஆராயப்படுகிறது. ஏனெனில் எதிர்ப்பு அரசியல் என்ற முறையில் உலகின் தனித்துவமான விடுதலை அமைப்பாக இருந்ததை ஏற்றக் கொள்ளும் இவ் ஆய்வுகள் பல விமர்சனங்களின் மத்தியிலும் தலைவர் பிரபாகரனது போராட்ட முறைகளையும் அது மாறிவரும் உலக ஒழுங்கின் பிரகாரம் எப்படி அழிவுற்றது என்றும் ஆராயத் தொடங்கியிருக்கிறார்கள்.

மாறுதல் கால பயங்கரங்கள் (Horror of transition), துயர் சார் அரசியல் ( Politics of agony) தாள முடியாத நிகழ்வியல் (Unbearable reality) என்ற அரசியல் தத்துவார்த்த சொல்லாடல்களினூடாக முள்ளிவாய்க்காலில் வைத்து புலிகள் அழிக்கப்பட்டதை ஒரு கருத்தியல் அடையாளமாகக் கொண்டு வருகிறார்கள். இந்த ஆய்வுகள் தலைவர் பிரபாகரனை விமர்சித்தபோதும் ஒரு மேன்மையான இடத்திலேயே வைத்து ஆராய்கிறது. திரும்பிப் போக முடியாத ஒரு நிலை என்று இதை வர்ணிக்கிறார்கள்.

இங்கு ஈழச்சூழலிருந்து விமர்சனம் செய்ய முற்படுபவர்கள் ஒரு விடயத்தை மறந்து விடுகிறார்கள். பிரபாகரன் நடத்தியது ஆயுதப்போராட்டம். அது கொல்லுதலையும் கொல்லப்படுதலையும் ஆதாரமாகக் கொண்டது. வெற்றியாயினும் தோல்வியாயினும் அங்கு மிஞ்சுவது அழிவுதான். உடலிலே குண்டுகளைக் கட்டிககொண்டு போய் சிதறுபவர்களின் உயிர்துறப்பில் நாம் வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருந்தோம். இப்போது தூற்றுபவர்கள் இதை ஏன் முன்னுணரவில்லை.

இவர்கள் சூரியத்தேவன், வரலாற்று நாயகன், நெசவாளி என்று பிரபாகரனுக்கு சூட்டாத நாமம் இல்லை. முள்ளிவாய்க்காலுக்கு முன்புவரை பிரபாகரன் புகழ்பாடிய அவரது போராட்டத்தை ஏற்றுக்கொண்ட யாருக்குமே அவரை விமர்சிக்கிற தகுதியோ அருகதையோ கிடையாது. இன்று அதீத புகழ்பாடிய அவர்களே அவரை விமர்சி;க்கவும் தலைப்படுகிறார்கள். இதை சந்தர்ப்பவாதம் என்றில்லாமல் வேறு எப்படி அழைப்பது?

பிரபாகரன் 15 வயதில் வீட்டை விட்டு வெளியேறும் போது பி;ன்லேடன் இரட்டைக் கோபுரத்தை தகர்ப்பார் என்று முன்னுணர முடியாது. அன்றைய உலக ஒழுங்கின் பிரகாரம் சிங்கள இனவாத அரசை எதிர்ப்பதற்கு ஆயதப்போராட்ம்தான் அவருக்கு வசதியைக்கொடுத்தது.

காலத்திற்குக் காலம் மாறிவரும் உலக ஒழுங்கிற்கேற்ப தமது செயற்திட்டங்களை மாற்றிக்கொண்டு வந்தார் என்பதை உன்னிப்பாக அவதானிப்பவர்களுக்கே புரியும். ஐந்து வருடங்கள் தொடர்ச்சியாக அவர் சமாதானத்தை கடைப்பிடித்ததை பலர் மறந்து கதைக்கிறார்கள். அதுவே அவருக்கு புதைகுழியாகியதையும் வசதியாக மறந்து விடுகிறார்கள்.

இதையெல்hம் அவர் ஒரளவிற்கு முன்னுணர்ந்துள்ளார் என்பதை தற்போது ஆராயும் போது புரிகிறது. தாம் ஒரு மரபுவழி இராணுவமாக இனி நிலையெடுக்க முடியாது என்பதை உணர்ந்தவாராகவே அவர் பின்வாங்கியிருக்கிறார். அந்த புரிதலினூடாகவே அவர் ஒரு அரசியலை முள்ளிவாய்க்காலில் வைத்து செய்திருக்கிறார் என்று புரிகிறது. அது என்னவென்பதை காலம்தான் நமக்கு உணர்த்தும்.

இன்றைய சிங்களத்தின் உடைவு அதை லேசாகக் கோடிட்டுக்காட்டுகிறது. ஒரு வாதத்திற்கு புலிகள் இராணுவத்தை விரட்டியடித்து முழு தமிழீழ நிலப்பரப்பையும் கைப்பற்றுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்தப் போரின்போது கூட முள்ளிவாய்க்காலில் வைத்து கொல்லப்பட்டதற்கும் அதிகளவிலான பொதுமக்களையும் போராளிகளையும் இழந்தே நாம் அதை அடையவேண்டியிருந்திருக்கும். ஆனால் இன்றைய உலக ஒழுங்கின் பிரகாரம் ஒரு அந்நிய இராணுவத்தை நாம் எதிர்கொள்ள வேண்டியிருந்திருக்கும் அல்லது அதற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்திருக்காது. மீண்டும் ஒரு போருக்கு நாம் முகம் கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.

ஆனால் இன்று பிரபாகரன் தனது தனது தீர்க்கதரிசனத்தின் சாய்வுகளையும் சறுக்கல்களையும் மீறி எமது விடுதலையை ஒரு முக்கியமான கட்டத்தில் கொண்டு வந்து விட்டிருக்கிறார். தானும் “மறைந்து” தனது குடும்பத்தினரையும் தளபதிகள், போராளிகள் அவர்களின் குடும்பத்தினர் என்று இந்த போராட்டத்தை மூன்று தசாப்தங்களாகத் தாங்கிய அனைவரையும் காவு கொடுத்து ஒரு இனப்படுகொலையின் -இனச்சுத்திகரிப்பின் சாட்சிகளாக மடிந்திருக்கிறார்கள்.

இந்த அடிப்படையில் பார்த்தால் அவர் “மறைந்தும்” சிங்களம் அவரின் நிகழ்ச்சி நிரலுக்குள்ளேயே சிக்கி சுழல்வதுபோல்தான் தெரிகிறது. இது முள்ளிவாய்க்காலில் வைத்து பிரபாகரன் சிங்களத்திற்கு வைத்த “இறுதியும்” அறுதியுமான “செக்”.

முற்றும்.

Print , Return கனடாவில் தமிழீழத் தனியரசுக்கான மீள் வாக்கெடுப்பு விளம்பரம்மேலும் »
எம்மவர் நிகழ்வுகள் » முள்ளிவாய்க்கால் இறுவட்டு வெளிவந்துள்ளது!!!

சிறப்புச் செய்திகள் புதன், டிசம்பர் 23, 2009 20:40 மணி தமிழீழம்
போரினால் மிகப் பெரிய அவலங்கள் இடம்பெற்ற முதல் 10 நாடுகளில் இலங்கையும் இணைப்பு - எம்.எஸ்.எவ்
உலகில் போர் நடைபெற்றபோது, மிகப் பெரிய அவலங்கள் இடம்பெற்ற நாடுகள் வரிசையில் முதல் 10 நாடுகளில் சிறிலங்காவும் உள்ளடக்கப்பட்ட
திங்கள், டிசம்பர் 21, 2009 16:06 மணி தமிழீழம்
ரஜீவ விஜயசிங்கவிற்கு ஒரு திறந்த மடல்! (செய்தி நோக்கு)
பேராதனையில் பேராசிரியர் என்ற உயர் கல்விப் பட்டத்தைப் பெற்றவர் நீங்கள்! சமாதான காலத்தில் சமாதானம் தொடர்பாக பிரித்தானியாவின் பிறாட்போர்ட் பல்கலைக் கழகம் நடத்திய பட்டறையில் முதன்மைப்

திங்கள், டிசம்பர் 21, 2009 02:24 மணி தமிழீழம்
வவுனியா வதைமுகாம்களில் கிரேக்க தத்துவமும் பேசலாம்! பாலியல் உறவிலும் ஈடுபடலாம்! ரஜீவ விஜயசிங்க கற்பிதம்!!!
வவுனியா வதைமுகாம்களில் இளம் தமிழ் பெண்களுக்கு எதிராக ஆயுதப் படைகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட பாலியல் கொடூரங்களுக்கு சிறீலங்கா மனித உரிமைகள் அமைச்சின் செயலர் ரஜீவ விஜயசிங்க நியாயம் கற்பித்துள்ளார்.

ஞாயிறு, டிசம்பர் 20, 2009 15:25 மணி தமிழீழம்
கனடா தழுவிய வரலாற்றுத் தேர்தல், கனடிய தமிழ் மக்கள் ஆணை தமிழீழமே தீர்வு என 99.82 சதவீத மக்கள் தீர்ப்பு
வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்காக கனடியத் தமிழ் மக்களிடையே, 19-12-2009 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 9 மணி வரை நடத்தப்பட்ட வாக்குக்கணிப்பு மொத்தமாக 48,583 வாக்காளர்கள்
வெள்ளி, டிசம்பர் 18, 2009 03:31 மணி தமிழீழம்
துட்ட (சரத்) காமினிக்காக யாழ்ப்பாணம் நோக்கி ஒரு தூது!!! (செய்தி நோக்கு)
சிங்கள தேசத்தின் அதிபர் தேர்தலுக்கான நாள் நிர்ணயிக்கப்பட்டு தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தமிழீழ மக்களின் வாக்கு வங்கியைக் குறிவைத்து தமது காய்களை மகிந்த ராஜபக்சவும், சரத் பொன்சேகாவும் நகர்த்தி வருகின்றனர்.

முள்ளி வாய்க்கால் -நடந்தது என்ன

Print , Return

கனடாவில் தமிழீழத் தனியரசுக்கான மீள் வாக்கெடுப்பு விளம்பரம்
மேலும் »
<object classid="clsid:D27CDB6E-AE6D-11cf-96B8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=9,0,28,0" width="310" height="72"> <param name="movie" value="uploads/images/adverts/urgain_flash.swf" /> <param name="quality" value="high" /> <embed src="uploads/images/adverts/urgain_flash.swf" mce_src="uploads/images/adverts/urgain_flash.swf" quality="high" pluginspage="http://www.adobe.com/shockwave/download/download.cgi?P1_Prod_Version=ShockwaveFlash" type="application/x-shockwave-flash" width="310" height="72"></embed> </object>

எம்மவர் நிகழ்வுகள்
»
முள்ளிவாய்க்கால் இறுவட்டு வெளிவந்துள்ளது!!!
சிறப்புச் செய்திகள்
புதன், டிசம்பர் 23, 2009 20:40 மணி தமிழீழம்
போரினால் மிகப் பெரிய அவலங்கள் இடம்பெற்ற முதல் 10 நாடுகளில் இலங்கையும் இணைப்பு - எம்.எஸ்.எவ் உலகில் போர் நடைபெற்றபோது, மிகப் பெரிய அவலங்கள் இடம்பெற்ற நாடுகள் வரிசையில் முதல் 10 நாடுகளில் சிறிலங்காவும் உள்ளடக்கப்பட்ட
திங்கள், டிசம்பர் 21, 2009 16:06 மணி தமிழீழம்
ரஜீவ விஜயசிங்கவிற்கு ஒரு திறந்த மடல்! (செய்தி நோக்கு) பேராதனையில் பேராசிரியர் என்ற உயர் கல்விப் பட்டத்தைப் பெற்றவர் நீங்கள்! சமாதான காலத்தில் சமாதானம் தொடர்பாக பிரித்தானியாவின் பிறாட்போர்ட் பல்கலைக் கழகம் நடத்திய பட்டறையில் முதன்மைப்
திங்கள், டிசம்பர் 21, 2009 02:24 மணி தமிழீழம்
வவுனியா வதைமுகாம்களில் கிரேக்க தத்துவமும் பேசலாம்! பாலியல் உறவிலும் ஈடுபடலாம்! ரஜீவ விஜயசிங்க கற்பிதம்!!! வவுனியா வதைமுகாம்களில் இளம் தமிழ் பெண்களுக்கு எதிராக ஆயுதப் படைகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட பாலியல் கொடூரங்களுக்கு சிறீலங்கா மனித உரிமைகள் அமைச்சின் செயலர் ரஜீவ விஜயசிங்க நியாயம் கற்பித்துள்ளார்.
ஞாயிறு, டிசம்பர் 20, 2009 15:25 மணி தமிழீழம்
கனடா தழுவிய வரலாற்றுத் தேர்தல், கனடிய தமிழ் மக்கள் ஆணை தமிழீழமே தீர்வு என 99.82 சதவீத மக்கள் தீர்ப்பு வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்காக கனடியத் தமிழ் மக்களிடையே, 19-12-2009 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 9 மணி வரை நடத்தப்பட்ட வாக்குக்கணிப்பு மொத்தமாக 48,583 வாக்காளர்கள்
வெள்ளி, டிசம்பர் 18, 2009 03:31 மணி தமிழீழம்
துட்ட (சரத்) காமினிக்காக யாழ்ப்பாணம் நோக்கி ஒரு தூது!!! (செய்தி நோக்கு) சிங்கள தேசத்தின் அதிபர் தேர்தலுக்கான நாள் நிர்ணயிக்கப்பட்டு தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தமிழீழ மக்களின் வாக்கு வங்கியைக் குறிவைத்து தமது காய்களை மகிந்த ராஜபக்சவும், சரத் பொன்சேகாவும் நகர்த்தி வருகின்றனர்.

தமிழர் மகிந்தவுக்கு அதரவு-ராட்டர்

அரைநிர்வாணத்துடனேயே ஜனாதிபதி வேட்பு மனுவில் கையெழுத்திட்டுள்ளார்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே அரைநிர்வாணத்துடன் விசேட பூஜையொன்றை நடத்தி, வேட்பு மனுவில் கையெழுத்திட்டதால் வேட்பு மனுக் கையெழுத்திடும் காட்சியை படம்பிடிக்காததால் அவர் வேட்பு மனுவில் கையெழுத்திடும் படங்கள் ஊடகங்களுக்கு வழங்கப்படவில்லையென ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தலைவர் ஒருவர் எமது இணையத்தளத்திற்குத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பை மதத்தலைவர்களின் ஆசீர்வாதத்திற்கு மத்தியில் வெளியிட்டமை குறித்த புகைப்படங்களை ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு ஊடகங்களுக்கு வழங்கியிருந்தது. எனினும், வேட்பு மனுவில் கையெழுத்திடும் படம் ஏன் வெளியிடப்படவில்லையெனக் கேட்டபோதே அந்த அதிகாரி இதனைக் குறிப்பிட்டுள்ளார். கிடைத்துள்ள தகவல்களின்படி குறித்த பூஜையை நாடாளுமன்ற உறுப்பினர் நிருபமா ராஜபக்சேவின் கணவரான திருநடேசனே ஏற்பாடு செய்துள்ளார். சோதிடத்தில் கடும் நம்பிக்கைக் கொண்டு செயற்பட்டுவரும் ஜனாதிபதி அரைநிர்வாணத்துடன் கையெழுத்திட்ட வேட்பு மனுவை தேர்தல் ஆணையாளரின் பின்புறமாகச் சென்று வடக்கு திசையைப் பார்த்தவாறே வழங்கியிருந்தார்.
அதேவேளை, சோதிடர்களின் ஆலோசனைகளின்படி தற்போது பகிரங்கக் கூட்டங்களில் கலந்துகொள்வதில்லையெனவும் ஜனாதிபதித் தீர்மானித்துள்ளார்.
.

மகிந்தவின் நிர்வாணம்

சனி, 26 டிசம்பர், 2009

இளையராஜா

Albums [Instrumental/Non-Film Outputs]
Year
Album
Year
Album
1986
How to Name it
1988
Nothing but wind
2005
Thiruvasagam
2007
The Music Messiah
2008
Manikantan Geet Mala
2009
Namratha Ke Sagar
[edit] Tamil
Year
Album
Year
Album
1978
Sigappu Rojakkal, 16 Vayathinelle, Achaani, Aval Appadithaan, Aval Oru Pachai Kuzhanthai, Bairavi, Chitukuruvi, Illamai Oonjal Aadukirathu, Ithu Eppadi Irukku, Kaatrile Varum Geetham, Kannan Oru Kai Kuzhanthai, Kilake Pogum Rail, Maariyamman Thiruvizha, Mullum Malarum, Priya, Sattam En Kayil, Sonnathu Nee Thaanaa, Thiru Kalyanam, Thirupura Sundari, Thiyaagam, Vaazha Ninaiththaal Vaazhalaam, Vatathukkul Sathuram
1979
Aarulirunthu Arupathuvarai, Agal Vilaku, Anbe Sangeetha, Annai Oru Aalayam, Azhage Unnai Aaradhikeeran, Chakalathi, Dharma Yutham, Kadavul Amaitha Medai, Kalyana Raaman, Kavarimaan, Lakshmi, Mugaththil Mugam Paarkkalaam, Muthal Iravu, Naan Vazhavaipen, Nallothor Kudumbam, Niramaraatha Pookal, Odi Vilaiyaadu, Thaaththaa, Pagalil Oru Iravu, Pattakathi Bairavan, Ponu Ooruku Puthusu, Poonthalir, Puthiya Vaarpugal, Rosappo Ravikaikaari, Sonathe Neethana, Uthiri Pookal, Vetrikku Oruvan
1981
Raja Paarvai, Tik Tik Tik, Paneer Pushpangal
1983
Moondram Pirai
1985
Muthal Mariyathai, Sindhu Bhairavi
1986
Mouna Raagam, Punnagai Mannan
1987
Nayakan
1989
Rajadhi Raja, Siva, Maappillai, Varusham 16, Apoorva Sagodharargal, Vetri Vizha , Karagatakkaran
1990
Pandian, Adhisaya piravi , Chinna Thambi
1991
Thalapathi, Guna
1992
Mannan , Chinna thaayi
1997
Kadhalukku Mariyadhai
1999
Sethu, Hey Ram
2002
Azhagi
2003
Pithamagan
2004
Virumaandi
2005
Adhu Oru Kana Kaalam,Mumbai Express
2008
Dhanam, Inimale Nngathane, Uliyin Osai, Ajantha, kangalum kavipadudhe
2009
Naan Kadavul, Nandhalala, Azhagar Malai, Valmiki, Kadhal Kadhai, Jagan Mohini, Kannukulle, Mathiya Chennai,Pazhassi Raja
[edit] Hindi
Year
Album
Year
Album
1983
Sadma
1985
Kamagni
1989
Mahadev
1990
Appu Raja
1991
Anjali, Aadmi Aur Apsara
1996
Aur Ek Prem Kahani, Saza-E-Kala Pani, Chhaila
1999
Hey Ram, Velu Nayakan
2001
Lajja
2005
Mumbai Xpress, Divorce: Not Between Husband and Wife
2006
Shiva 2006
2007
Cheeni Kum
2009
Paa, Chal Chalein, Happi,
2010
Mausam, SRK
2011
[edit] Malayalam
Year
Album
Year
Album
1978
Aaru Manikkoor, Vyamoham
1980
Dooram Arike
1981
Garjanam
1982
Olangal, Aa Rathri, Aalolam
1983
Sandhyakku Virinja Poovu, Oomakkuyil, Pinnilavu
1984
My Dear Kuttichathan, Mangalam Nerunnu, Onnanu Nammal, Unaroo
1985
Yatra
1986
Poomukhapadiyil Ninneyum Kathu, Kaveri
1988
Moonnam Pakkam
1989
Adharvam, Chaithram, Season
1991
Anaswaram, Ente sooryaputhrikku
1992
Pappayude Swantham Appoos, Aparatha
1993
Jackpot
1996
Kaalapani, Man of the Match
1997
Guru, Kaliyuunjalu, My dear Kuttichathan, Oru Yathramozhi
1998
Anuragakottaram, Manjeera dhwani
2000
Kochu Kochu Santhoshangal, Kallu Kondorupennu
2001
Friends
2003
Manasinakkare, Nizhalkoothu
2005
Achuvinte Amma, Ponmudipuzhayorathu, Twinkle twinkle Little star
2006
Rasathanthram, Pachakkuthira
2007
Vinodayathra, Sooryan
2008
Innathe Chinthaavishayam, S M S
2009
Bhagyadevatha, Pazhassi Raja
[edit] Telugu
Year
Album
Year
Album
1976
Bhadrakali
1978
Ajeyudu, Vayasu Pilichindhi
1979
Amma Evarikaina Amma, Erra Gulabeelu, Kalyana Ramudu, Nuvve Naa Srimathi, O Inti Katha, Oorvasi Neeve Naa Priyasi, Pancha Bhoothalu, Yugandhar
1980
Guru, Kala Rathri, Kali, Mayadari Krishnudu, Pasidi Moggalu
1981
Amavasya Chandrudu, Chinnari Chitti Babu, Kotha Jeevithalu, Madhura Geetham, Mouna Geetham, Seetha Koka Chilaka, Tik Tik Tik
1982
Nireekshana, Poola Pallaki, Prema Sangamam, Radha Madhavi, Ragamalika, Vasantha Kokila
1983
Abhilasha, Mantrigari Viyyankudu, Pallavi Anupallavi, Rajkumar, Saagara Sangamam, Seethakokachiluka, Sitaara
1984
Amma Nannu Deevinchu, Challenge, Jalsa Rayudu, Khaidi Veta, Love Story, Merupu Dadi, Noorava Roju, Raaga Bandham
1985
Aalaya Deepam, Aatma Bandhuvu, Anveshana, Chilipi Yavvanam, Darja Donga, Dongala Vetagadu, Jalsa Bullodu, Jwala, Oka Radha Iddaru Krishnulu, Prema Sasthram, Preminchu Pelladu, Swathi Muthyam, Udaya Geetham
1986
Aalapana, Kiratakudu, Ladies Tailor, Manchi Manasulu, Mouna Ragam, Mr. Bharath, Rakshasudu, Sri Shirdi Saibaba Mahathyam
1987
Aaradhana, Kedi, Maa Inti Krishnudu, Maharshi, Nayakudu, Rendu Tokala Pitta, Sankeertana, Sister Nandini
1988
Aasthulu Antasthulu, Aakhari Poratam, Abhinandana, Chinna Babu, Gharshana, Marana Mrudangam, Rakthabhishekam, Rudraveena, Sathya, Sri Kanaka Mahalakshmi Recording Dance Troupe, Swarna Kamalam, Varasudochadu, Vaddante Pelli
1989
Apoorva Sahodarulu, Ashoka Chakravarthy, Bharyalu Jagratha, Chettu Kinda Pleader, Dance Master, Geethanjali, Gopala Rao Gari Abbayi, Kokila, Prema, Prema Geetham, Rudranetra, Shiva (film), Swathi Chinukulu, Tiger Siva
1990
Anjali, Bobbili Raja, Guru Sishyulu, Idem Pellam Baboi, Jagadeka Veerudu Athiloka Sundari, Kondaveeti Donga, Kshatriyudu, O Paapa Laali, Patnam Vachina Monagadu, Police Adhikari, Police Diary, Thoorpu Sindhooram
1991
Aditya 369, April 1 Vidudala, Chaitanya, Coolie No. 1, Keechurallu, Michael Madana Kama Raju, Nirnayam, Stuartpuram Police Station, Surya IPS
1992
Aa Okkati Adakku, Aswamedham, Chamanthi, Chanti, Chinarayudu, Dalapati, Detective Narada, Dharma Kshetram, Guna, Hrudayam, Killer, Kshatriya Putrudu, Priyathama, Meera, Moratodu Naa Mogudu
1993
Amma Koduku, Kunti Putrudu, Mahanadi, Repati Rowdy, Rowdy Zamindar, Toli Muddu
1994
Aadavallaku Maatrame, Samaram, Veera
1995
Sati Leelavati
1996
Kurradu Baboi
1997
Chinnabbayi
1998
Prema Kavyam
1999
Antahpuram, Gayatri, Preminchedi Endukamma, Time
2000
2001
2002
Ninu Choodaka Nenundalenu
2003
Avuna, Sambhu
2004
Pothuraju, Siva Putrudu
2005
Mumbai Express
2006
Hope, Shiva 2006
2007
Anumanaspadam, Sunny
2008
Malleppuvvu
2009
Jaganmohini, Nenu Devudni, Om Shanthi
[edit] Kannada
Year
Album
Year
Album
1978
Maathu Tappada Maga
1981
Geeta, Janma Janmada Anubandha, Nee Nanna Gellalare
1983
Accident, Pallavi Anu Pallavi
1984
Bharjari Bete
1996
Nammoora Mandara Hoove, Shivasainya
1998
Hoomale
2004
Namma Preetiya Ramu
2007
Aa dinagalu
2009
Nannavanu, Bhagyadha Balegara, Prem Kahani,Suryakanthi
[edit] References and notes
^ http://www.myspace.com/theroyalphilharmonicorchestra Thursday, 10 June. Accessed 9 June 2009.
^ Imdb, Ilaiyaraaja
^ Allirajan, M. 2004. Musical journeys. The Hindu, Thursday, 10 June. Accessed 12 October 2006.
^ Behal, S. 2006. Melodious music. The Hindu, 23 July. Accessed 12 October 2006.
^ a b c d e Greene, P.D. 1997. Film music: Southern area. Pp. 542-546 in B. Nettl, R.M. Stone, J. Porter and T. Rice (eds.). The Garland Encyclopedia of World Music. Volume V: South Asia — The Indian Subcontinent. New York: Garland Pub. (p. 544).
^ Ministry of Information and Broadcasting, India. 2006. Directorate of Film Festivals. Accessed 22 November 2006.
^ Sangeetha Devi, K. 2007. Music from the past. The Hindu, Saturday, January 13. Accessed 3 March 2007.
^ Staff reporter. 2005. Ilaiyaraja's daughter gets engaged. The Hindu, Friday, Aug 05. Accessed 3 March 2007.
^ a b Mohan, A. 1994. Ilaiyaraja: composer as phenomenon in Tamil film culture. M.A. thesis, Wesleyan University (pp. 106-107).
^ a b Ramnarayanan, G. 1989. Matchless in quality and speed! The Hindu, May 26. Accessed 13 October 2006.
^ Ilaiyaraja. 1999. Sangeetha Kanavugal (2nd edition). Chennai, India: Kalaignaan Pathipagam.
^ Rangarajan, M. 2004. Memorable evening in many ways. The Hindu, Friday, July 9. Accessed 19 November 2006.
^ Panneerselvan, A.S. 1989. Ilaiyaraaja — Musical mission (Part 1). Frontline, (date of publication indeterminate). Accessed 5 March 2008.
^ Author unknown. 2005. No point in classifying music, says Ilayaraja. The Hindu, Sunday, June 19. Accessed 1 February 2007.
^ Gautam, S. 2004. 'Suhana safar' with Salilda. The Hindu, Tuesday, November 13. Accessed 13 October 2006.
^ Chennai, S. 2005. Looking back: flawless harmony in his music. The Hindu, Sunday, November 20. Accessed 15 November 2006.
^ Choudhury

கவிதை

தாய்மடி காக்கவென்று தங்கமண் மீட்கவென்று-வானம்பாடிகள் பாடுகிறார் வந்து பாருமே -நீங்கள் வந்து பாருமே.. தாய்மடி…இசைமடியில் பண்ணெடுத்துத் தாய்மடியை-வானம்பாடிகள் பாடுகிறார் பாரி ஆகுவீர்-நீங்கள் பாரி ஆகுவீர்! .. எங்கள் -தாய்மடி.. குண்டுகளின் பெருந்தீயில் மண்ணெரியும்தாய்மடியைக் காத்திடவே தங்கமைந்தர் பாடுகின்றார்!நீயுதிர்க்கும் காசுகளில் நிலத்துயரின் பசிமீட்கும்தாய்மனது இருக்குதடா தமிழாநீ எழுந்திடடா –தாய்மடி தாழம்பூக் காடிடுருக்கும் தாமரைக்குக் குளமிருக்கும்ஆலம் விழுதுகளில் அணிலோடிக் காதல்செய்யும்வேழம் முறுகிவரும் வேய்ங்குயிலின் பாட்டிருக்கும்வீடுவரும் பசுநிரையில் வேர்நிலமே பால்குடிக்கும்.. –தாய்மடி தீயெழுந்து வருகுதடா திமிர்கொடுத்து எரியுதடாபாயெறிந்த கடற்பரப்பில் பக்சன்படை திரியுதடாசேய்மழலை துடிக்குதடா தேசநிலம் வெடிக்குதடாதேசத்து உறவுகளே தொப்புள்கொடி அழைக்குதடா.. .

வணக்கம் .

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே .

இந்த இணைய தளம் எனது கன்னி முயற்சி . இது ஒரு கதம்ப வடிவிலான

தளம்.இந்த தளம் நன்றாக இருக்குமானால் உங்கள் நண்பர்கள் உறவினர்களிடம் தெரிவிக்கவும். நன்றி.

காலக்கிரமத்தில் தமிழ் விளையாட்டு பொது அறிவு அரசியல் விடுதலை என் தனித்தனியே தளங்களை அம்மைக்க இருக்கிறேன் .உங்கள் ஆதரவுக்கு நன்றி .