அரைநிர்வாணத்துடனேயே ஜனாதிபதி வேட்பு மனுவில் கையெழுத்திட்டுள்ளார்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே அரைநிர்வாணத்துடன் விசேட பூஜையொன்றை நடத்தி, வேட்பு மனுவில் கையெழுத்திட்டதால் வேட்பு மனுக் கையெழுத்திடும் காட்சியை படம்பிடிக்காததால் அவர் வேட்பு மனுவில் கையெழுத்திடும் படங்கள் ஊடகங்களுக்கு வழங்கப்படவில்லையென ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தலைவர் ஒருவர் எமது இணையத்தளத்திற்குத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பை மதத்தலைவர்களின் ஆசீர்வாதத்திற்கு மத்தியில் வெளியிட்டமை குறித்த புகைப்படங்களை ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு ஊடகங்களுக்கு வழங்கியிருந்தது. எனினும், வேட்பு மனுவில் கையெழுத்திடும் படம் ஏன் வெளியிடப்படவில்லையெனக் கேட்டபோதே அந்த அதிகாரி இதனைக் குறிப்பிட்டுள்ளார். கிடைத்துள்ள தகவல்களின்படி குறித்த பூஜையை நாடாளுமன்ற உறுப்பினர் நிருபமா ராஜபக்சேவின் கணவரான திருநடேசனே ஏற்பாடு செய்துள்ளார். சோதிடத்தில் கடும் நம்பிக்கைக் கொண்டு செயற்பட்டுவரும் ஜனாதிபதி அரைநிர்வாணத்துடன் கையெழுத்திட்ட வேட்பு மனுவை தேர்தல் ஆணையாளரின் பின்புறமாகச் சென்று வடக்கு திசையைப் பார்த்தவாறே வழங்கியிருந்தார்.
அதேவேளை, சோதிடர்களின் ஆலோசனைகளின்படி தற்போது பகிரங்கக் கூட்டங்களில் கலந்துகொள்வதில்லையெனவும் ஜனாதிபதித் தீர்மானித்துள்ளார்.
.
திங்கள், 28 டிசம்பர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக