தாய்மடி காக்கவென்று தங்கமண் மீட்கவென்று-வானம்பாடிகள் பாடுகிறார் வந்து பாருமே -நீங்கள் வந்து பாருமே.. தாய்மடி…இசைமடியில் பண்ணெடுத்துத் தாய்மடியை-வானம்பாடிகள் பாடுகிறார் பாரி ஆகுவீர்-நீங்கள் பாரி ஆகுவீர்! .. எங்கள் -தாய்மடி.. குண்டுகளின் பெருந்தீயில் மண்ணெரியும்தாய்மடியைக் காத்திடவே தங்கமைந்தர் பாடுகின்றார்!நீயுதிர்க்கும் காசுகளில் நிலத்துயரின் பசிமீட்கும்தாய்மனது இருக்குதடா தமிழாநீ எழுந்திடடா –தாய்மடி தாழம்பூக் காடிடுருக்கும் தாமரைக்குக் குளமிருக்கும்ஆலம் விழுதுகளில் அணிலோடிக் காதல்செய்யும்வேழம் முறுகிவரும் வேய்ங்குயிலின் பாட்டிருக்கும்வீடுவரும் பசுநிரையில் வேர்நிலமே பால்குடிக்கும்.. –தாய்மடி தீயெழுந்து வருகுதடா திமிர்கொடுத்து எரியுதடாபாயெறிந்த கடற்பரப்பில் பக்சன்படை திரியுதடாசேய்மழலை துடிக்குதடா தேசநிலம் வெடிக்குதடாதேசத்து உறவுகளே தொப்புள்கொடி அழைக்குதடா.. .
சனி, 26 டிசம்பர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக