THAMILEELAM

லேபிள்கள்

எனது வலைப்பதிவு பட்டியல்

வியாழன், 31 டிசம்பர், 2009

அர்ச்சகர் செய்த திருவிளையாடகள்

ஸ்ரீபெரும்புதூர், டிச .30
காஞ்சீபுரம் மச்சேரஸ்வர் கோவிலின் கருவறையில் பல பெண்களுடன் செக்ஸ் லீலைகளில் ஈடுபட்டதாக அர்ச்சகர் தேவநாதன் மீது சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து தேவநாதன் காஞ்சீபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் சரண்டைந்தார். போலீசார் 5 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

அர்ச்சகர் தேவநாதன் காஞ்சீபுரம் பகுதியைச் சேர்ந்த பல முக்கிய வி.ஐ.பி. பெண்களிடம் கோவில் கருவறை, லாட்ஜ் மற்றும் சம்பந்தப்பட்ட பெண்களின் வீடுகளில் செக்சில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இது தொடர்பான வழக்கு சிவகாஞ்சி போலீசாரிடமிருந்து காஞ்சீபுரம் மாவட்ட குற்றவியல் போலீசுக்கு அதிரடியாக மாற்றப்பட்டது.

டி.எஸ்.பி. விஜயராகவன் தலைமையில் 3 இன்ஸ்பெக்டர்கள், 3 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் பெண் போலீசார் கொண்ட தனிப்படை இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகிறது.

இந்த வழக்கை போலீசார் விசாரிக்க ஆரம்பித்த உடனே இதில் சம்பந்தப்பட்ட பெண்கள் அனை வரும் தலைமறைவு ஆனார்கள். போலீசார் தீவிர விசாரணை நடத்தி அர்ச்சகர் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்தனர். காஞ்சீபுரம் பூக்கடை சத்திரம் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் மனைவி மீரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணும் மற்றும் பூ வியாபாரம் செய்யும் நீலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆகியோர் தேவநாதன் வசியம் மருந்து கொடுத்து மயங்கி கோவில் கருவறையில் வைத்து கற்பழித்து விட்டதாக பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

3 நாட்களுக்கு முன் அர்ச்சகர் தேவநாதனை போலீசார் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று ஆண்மை பரிசோதனை செய்தனர். தற்போது தேவநாதன் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் காஞ்சீபுரம் பகுதியைச் சேர்ந்த மேலும் 2 பெண்கள் போலீசாரிடம் தேவநாதன் தன்னை கற்பழித்து விட்டதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

போலீசார் அந்த 2 பெண்களிடமும் ரகசியமாக பெண் போலீசாரின் உதவியுடன் விசாரணை செய்து வருகின்றனர். அதில் ஒருவர் திருமணம் ஆகாத இளம்பெண். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று தெரிய வந்துள்ளது.
எனவே செக்ஸ் அர்ச்சகர் தேவநாதனுக்கு எதிரான வழக்கு தற்போது வலுப்பெற்று வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக