டில்கோ ஜஃப்னா சிட்டி ஹோட்டல்’ 80 மில்லியன் ரூபா செலவில் யாழ். நகரில் சுற்றுலா ஹோட்டல்
வடக்கில் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் திட்டத்திற்கமைய யாழ். நகரில் 33 அறைகளைக் கொண்ட ‘டில்கோ ஜஃப்னா சிட்டி ஹொட்டேல்’ என்ற சுற்றுலா ஹோட்டல் 2010 ஆம் ஆண்டு திறக்கப்படவுள்ளதாக முதலீட்டுச் சபையின் தலைவர் தம்மிக்க பெரேரா தெரிவித்தார்.
சுமார் 80 மில்லியன் ரூபா முதலீட்டு டன் கட்டப்பட்டு வரும் இந்த ஹோட்டல் 2010 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் திறக்கப்படவுள்ளதாக டில்கோ நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் தவராஜா திலகராஜா தெரிவித்துள்ளதாகவும் தம்மிக்க பெரேரா தினகரனுக்குத் தெரி வித்தார்.
கடற்கரையையும், கடலேரி யையும் அண்டியுள்ள பகுதியில் சுமார் 340 பேர்ச்சஸ் பரப்பளவில் கட்டப்பட்டு வரும் டில்கோ ஜப்னா சிட்டி ஹோடேல் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர், வர்த்தக சமூகத்தினர் மற்றும் சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் சகல வசதிகளையும் கொண்டதாக அமையவிருப்பதாகவும் தம்மிக்க பெரேரா தெரிவித்தார்.
இலங்கை முதலீட்டு சபையில் இதற்கான ஒப்பந்தம் அண்மையில் கைச்சாத்தானது. முதலீட்டுச் சபையின் தலைவர் தம்மிக்க பெரேராவும், டில்கோ நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் தவராஜா திலகராஜாவும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
வீரசிங்கம் மண்டபத்தை அண்மித்ததாக கட்டப்பட்டு வரும் ‘டில்கோ ஜப்னா சிட்டி ஹோட்டேல்’ திறக்கப்பட்டதும் மேலும் உல்லாசப் பயணத்துறை சார்ந்த ஹோட்டல்களுக்கான முதலீடுகள் செய்யப்படவுள்ளன என்றும் தம்மிக்க பெரேரா தெரிவித்தார்..
வியாழன், 31 டிசம்பர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக