வவுனியா பிரதேச வானொலியில் கருணாவிற்கு ஆதரவான அறிவிப்பாளர்கள் திணிக்கப்பட்டுள்ளனர்
வவுனியாவில் ஒளிபரப்பாகிவரும் வானொலி அறிவிப்பாளர்களாக பணியாற்றிவரும் கூட்டுத்தாபன ஊழியர்களை விலகுமாறு அச்சுறுத்தியுள்ள கருணா தனக்கு ஆதரவான அறிவிப்பாளர்களை பணியில் அமர்த்தி அந்த வானொலியை தனக்குரிய வானொலிச் சேவையாக மாற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து அறிவிப்பாளர்கள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தலைவரிடம் முறைப்பாடு செய்துள்ளனர். எதிர்வரும் ஜனவரி 26ம் திகதி வரை தன்னால் எதுவும் செய்ய முடியாது என கூட்டுத்தாபனத் தலைவர் கூறியுள்ளார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில ஆயுதக் குழுக்கள் இயங்கி வருகின்றன. இந்த ஆயுதக் குழுக்கள் அரசாங்கத்தின் அரசியல்வாதிகளின் அனுசரணையுடன் செயற்பட்டு வருகின்றன. இந்த நிலைமையில் அந்தப் பகுதிகளில் பணியாற்றும் அரச ஊழியர்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
வியாழன், 31 டிசம்பர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக