THAMILEELAM

லேபிள்கள்

எனது வலைப்பதிவு பட்டியல்

வியாழன், 31 டிசம்பர், 2009

ஐ.தே.க. பிரபலம் கைதாவாரா.

சரத் பொன்சேக்காவின் பௌத்த சமய விவகார இணைப்பாளரை கைதுசெய்யுமாறு காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேக்காவின் பௌத்த சமய விவகார இணைப்பாளர் ஊவதென்னே சுமணதேரரை உடனடியாக கைதுசெய்து அவசரகால சட்டத்தின் கீழ் ஜனாதிபதித் தேர்தல் நிறைவடையும் வரைத் தடுத்து வைக்குமாறு காவல்துறைமா அதிபர் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் பிரதி காவல்துறை மா அதிபர் சந்திரா விநிஸ்டிற்கு உத்தரவிட்டுள்ளதாக காவல்துறை தலைமையகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சரத் பொன்சேக்காவிற்கு ஆதரவு வழங்கும் 28 பிரதான நபர்களை பயங்கரவாதத்திற்கு ஆதரவு வழங்கினார்கள் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யுமாறு பாதுகாப்புச் செயலாளர் காவல்துறை மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார். இதனடிப்படையில், தம்பர அமில தேரர், மருதானை சுதுவெல்ல பிரதேசத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் கித்சிறி ராஜபக்~ ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தற்போது கைதுசெய்ய உத்தரவிடப்பட்டுள்ள ஊவதென்னே சுமணதேரர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிக்குப் பிரிவு செயற்பாட்டாளர் ஆவார். அத்துடன், அவர் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரண்ணாகொடவிற்கு நெருக்கமானவர். ஜனாதிபதியின் நெருங்கிய உறவினரான திசர சமரசிங்கவை கடற்படைத் தளபதியாக நியமிப்பதற்காக கரண்ணாகொடவை அந்தப் பதவியிலிருந்து விலகச் செய்யும் முனைப்புகளில் ஜனாதிபதிக்கும் கரண்ணாகொடவிற்கும் இடையிலான இணைப்பு நடவடிக்கைகளை ஊவதென்னே சுமண தேரரே மேற்கொண்டிருந்தார்.
இவ்வாறு செயற்பட்ட சுமணதேரர் ஜெனரல் சரத் பொன்சேக்காவிற்கும் கரண்ணாகொடவிற்கும் இடையில் நிலவும் ஒருதசாப்த கோபதாபங்களை சுமுக நிலைக்குக் கொண்டுவருவதற்காக தலையிட்டமை காரணமாகவே ஜனாதிபதி ஆத்திரமடைந்துள்ளார்.
அதேவேளை, சுயாதீன தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் ஒருவரைத் தாக்கியதாகக் கூறி ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினரான ரோஹன தினபுரன என்பவர் நேற்றிரவு இரகசிய காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அதேபோல், சரத் பொன்சேக்காவின் ஊடக இணைப்பாளரான அசங்க மாகெதரவின் வீட்டிற்கு நேற்றிரவு சென்ற இரகசிய காவல்துறையினர் அவரது செயற்பாடுகள் குறித்து பெற்றோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக