THAMILEELAM

லேபிள்கள்

எனது வலைப்பதிவு பட்டியல்

திங்கள், 5 ஏப்ரல், 2010

தீவுப்பகுதி மக்கள் ஒன்றியம் கூட்டமைப்புக்கு ஆதரவு
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிப்பீர்
தமிழீழ மக்களின் இன்றய காலத்தின் கட்டாயம். என்றுமே நாம் கண்டிராத வரலாற்றுப் பின்னடைவின் பின் நம்மீது திணிக்கப்பட்டுள்ள ஒரு தேர்தல்.தேசீயத் தலைமையை அழித்துவிட்ட அகங்காரத்தில் இன்னொரு உறுதியான தலைமை உருவாக விடவே மாட்டேனென்று மகிந்த கங்கணம் கட்டி நிற்கும் வேளையில்....
தமிழ் மக்களாகிய நாம் என்ன செய்யலாம்?.நமக்குள்ளே உள்ள பிரச்சனைகளை நாமே தீர்த்துக் கொள்வோம்.அதைப் பாவித்து அவன் நம் தலையில் மிளகாய் அரைக்கவா?. இல்லவே இல்லை. எம்பிரச்சனைகளை ஒருபக்கம் ஒதுக்குவோம்.ஓரணியில் திரள்வோம்.இலங்கை அரசுக்கும் உலகத்திற்கும் ஒரு செய்தியைச் சொல்வோம்.ஈழத்தமிழனை இனியும் பிரிக்கவோ ஏற்மாற்றவோ முடியவே முடியாது.எங்கள் தமிழர் ஒன்றானது கண்டு எங்கள் எதிரிகள் எங்கோ மறைவார்.இது உறுதியிலும் உறுதி.தமிழர் தாயகம் வடக்கையும் கிழக்கையும் முழுமையாய் ஒருங்கிணைத்து கொள்கையில் உறுதியோடு அரசியல் சாணக்கியத்தோடு அடுத்த கட்டத்திற்கு தமிழரை நகர்த்தவல்ல அணியான தமிழ்த் தேசீயக் கூட்டமைப்பைபிறகு தமிழீழ மக்களை வாக்களிக்கும்
படி கேட்டுக் கொள்கிறோம்.
தீவுப்பகுதி மக்கள் ஒன்றியம் .ஐரோப்பா -கனடா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக