பரந்தன் இணையம்-துரோக தனம் ஒரு உதாரணம் உலகத்தமிழர் பேரவை மா நாட்டில் புலிகளை கடுமையாக விமர்சித்த டேவிட் மில்லிபான்ட்
இரண்டாவது தடவையாக உலகத்தமிழர் பேரவை இலண்டனில் பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தினுள் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதில் டேவிட் மில்லிபான்ட் உரையாற்றினார். இந்த உரையாடலில் புலிகள் சிறுவர்களை படையில் சேர்த்தார்கள் என வழமையான புராணத்தினை பாடியபின்னர் புலிகளும், அரசும் போர்க்குற்றம் புரிந்ததாக கூறியதுடன் இருவரையும் விசாரிக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தார். பிரித்தானிய அரசாங்கம் தமிழ் மக்கள் உரிமை தொடர்பில் தனது நிலைப்பாட்டினை மாற்றவில்லை என்பது டேவிட் மில்லிபான்ட் அவர்களின் உரையில் இருந்து தெரியவருகின்றது. எவ்வளவு செலவழித்து பாட்டி வைத்து கட்சிக்கு காசு சேர்த்து கொடுத்தாலும். எத்தனை தடவை பெரும் செலவில் கூட்டங்கள் நடத்தினாலும் பிரித்தானியா தனது அறிக்கைகளை திகதி மாற்றம் செய்து விடுமே தவிர உட்கிடக்கைகளை மாற்றாது. ஆகவே பிரித்தானிய தமிழர்கள் தான் இனி என்ன செய்யலாம் என சிந்திக்கவேண்டும். கடந்த வருடம் போர் உச்ச கட்டத்தில் இருந்தபோது பெரும் பொருட் செலவில் இத்தகைய ஓர் ஒன்று கூடல் வைக்கப்பட்டது. பல பேச்சாளர்கள், ஒபாமாவுக்கு நெருக்கமானவர்கள் என பலர் அழைக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் எதனையும் விசேடமாக பேசவில்லை மட்டுமன்றி பேசியதனை பத்திரிகைகளுக்கு போட கூடாது என எச்சரித்து விட்டும் சென்றனர்.இந்தமுறை பொல்லு கொடுத்து அடி வாங்கியது போல மில்லிபாண்டுக்கு அவரது கட்சிக்காக விருந்து வைத்து காசு சேர்த்து கொடுத்தது மட்டுமன்றி மீண்டும் புலி எதிர்ப்பு புராணம் பாடுவிக்க செய்ததே மிச்சம். .
ஒரு உதாரனம் iந்த செய்தி பரந்தன் டாட் கம இல் வந்த செய்தியாகும் .நன்றி .
இதனை வைத்து பரந்தன் இணையத்தின் உண்மை நிலை உன்களுக்கு புரியும்.
வியாழன், 25 பிப்ரவரி, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக