THAMILEELAM

லேபிள்கள்

எனது வலைப்பதிவு பட்டியல்

வெள்ளி, 8 ஜனவரி, 2010

எதிரணியின் பத்து அம்ச கோரிரிக்கை

பத்து அடிப்படை அம்சங்கள் அடங்கிய தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டார் பொன்சேகா
தேசிய பாதுகாப்பைப் பேணுதல், விலைவாசியைக் குறைத்தல் மற்றும் ஊழல், மோசடிகளை ஒழித்துக் கட்டுதல் உள்ளிட்ட 10 அம்சங்களை
அடிப்படை யாகக் கொண்ட எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவின் தேர்தல் விஞ்ஞாபனம் "பொது வேலைத்திட்டம்" என்ற பெயரில் நேற்றுக் கொழும்பில் வெளியிட்டு வைக்கப்பட்டது.கொழும்பு சிலோன் கொண்டினென்டல் ஹோட்டலில் நேற்றுக் காலை 10.30 மணிக்கு ஜெனரல் சரத் பொன்சேகா அவரது இந்தத் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைத்தார். எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிர மசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கருஜயசூரிய, அக்கட்சியின் பொதுச் செயலாளரும் எம்.பியுமான திஸ்ஸ அத்தநாயக்க, ஐ.தே.கட்சி எம்.பியான ரவி கருணாநாயக்க, ஜே.வி. பியின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க, அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, ஜன நாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி., முன்னாள் பிர தம நீதியரசர் சரத் என். சில்வா, சமயத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ் வில் கலந்துகொண்டனர்.மங்கள விளக்கேற்றி நிகழ்வு ஆரம்பித் துவைக்கப்பட்டது. தேசிய கீதத்தைத் தொடர்ந்து வேட்பாளர் சரத் பொன்சேகா தேர்தல் விஞ்ஞாபன பிரதிகளை அவரது கைகளால் சமயத் தலைவர்களுக்கு வழங்கினார். .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக