THAMILEELAM

லேபிள்கள்

எனது வலைப்பதிவு பட்டியல்

வெள்ளி, 8 ஜனவரி, 2010

மகிந்தவின் புதலவனுக்கு மோசடி புளைமைபரிச்ல்

மகிந்தாவின் புதல்வர் யோசித்தவிற்கு கடற்படையிலிருந்து 200 லட்ச ரூபா புலமைப் பரிசில் வழங்கப்பட்டுள்ளது.
கடற்படையின் சட்டதிட்டங்களை மீறியே ஜனாதிபதி மகிந்த ராஜபக்சாவின் புதல்வர்களில் ஒருவரான யோசித்த ராஜபக்சா இங்கிலாந்திலுள்ள டாக்னஸ் நேவல் அக்கடமி என்ற அரசப் பயிற்சிக் கல்லூரியில் கல்வியை மேற்கொண்டுள்ளார்.
ஜனாதிபதியின் புதல்வர் என்பதால் இந்தப் புலமைப் பரிசில் யோசித்த ராஜபக்சா
விற்கு அன்பளிப்பாக கிடைத்தது என அரசாங்கம் பிரசாரம் செய்த போதிலும் அவர் கடற்படையினரின் இரண்டு கோடி ரூபாவிற்கும் மேற்பட்ட பணத்தை செலவிட்டே இந்தப் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடற்படையின் சட்டங்களுக்கமைய அடிப்படை பாடநெறியைப் பூர்த்தி செய்த அதிகாரம் பெற்ற அதிகாரிகளை மாத்திரமே இந்தப் பாடநெறிக்கு அனுப்ப முடியும். எனினும், யோசித்த ராஜபக்சே ஆரம்பப் பயிற்சிகளை இரண்டு வாரங்கள் மாத்திரமே மேற்கொண்டிருந்தார்.
டாக்னஸ் நேவல் அக்கடமி, ஒருவரும் அல்லது இரண்டு வருடத்திற்கு ஒருமுறை இலங்கை கடற்படை அதிகாரிகளுக்குப் பயிற்சிகளை வழங்குவதற்கான புலமைப் பரிசில்களை வழங்கி வருகிறது.
இவற்றைக் குறித்து கவனம் செலுத்தாது அரசாங்கத்தின் உயர்மட்ட நபர் ஒருவரின் உத்தரவின்படியே யோசித்த ராஜபக்சேவிற்காக பாரியளவில் பணம் செலவிடப்பட்டதாக கடற்படைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக