THAMILEELAM

லேபிள்கள்

எனது வலைப்பதிவு பட்டியல்

செவ்வாய், 5 ஜனவரி, 2010

புலிகளின் சொத்துக்களை முடக்க நடவடிக்கை

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச சொத்துக்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் ஆரம்பம்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதே சொத்துக்களை அடையாளம் காணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான சர்வதேச சொத்துக்களை அரசுடமையாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. புலனாய்வுப் பிரிவினர் ஏற்கவே புலிகளுக்கு சொந்தமான ஒரு தொகுதி சர்வதேச சொத்துக்களை இனம் கண்டு, பட்டியல் படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஏனைய சொத்துக்களை அடையாளம் கண்டு பட்டியல் படுத்தும் பணிகளையும் புலனாய்வுப் பிரிவினர் தீவிரப்படுத்தி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. புலிகளின் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் மற்றும் கப்பல் ஒன்றை மீட்டமை மிகப் பெரிய சாதனைகளாகும் என புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். உலகமெங்கிலும் வாழ்ந்து வரும் புலம்பெயர் தமிழர்களிடம் பணம் திரட்டும் நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பா, ஸ்கென்டினேவிய நாடுகள், அவுஸ்திரேலியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் வாழும் இலங்கை புலம்பெயர் தமிழர்களிடம் பணம் திரட்டும் நடடிக்கைகள் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சில நாடுகளில், புலிகளுக்கு பணம் வழங்கிய நன்கொடையாளர்கள் பணத்தை மீளளிக்குமாறு நீதிமன்றத்தின் உதவியை நாடியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு சொத்துக்களை அரசுடமையாக்கும் பணிகளை முன்னெடுக்கும் நோக்கில் அரசாங்க அதிகாரிகள் குறித்த நாடுகளுக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாரியளவு பணத் தொகை ஒரு நாட்டிலிருந்து இன்னோர் நாட்டிற்கு இடமாற்றம் செய்யப்படும் சம்பவங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி உன்னிப்பாக அவதானித்து வருவதாக குறிப்பிடப்படுகிறது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக