THAMILEELAM

லேபிள்கள்

எனது வலைப்பதிவு பட்டியல்

வியாழன், 7 ஜனவரி, 2010

வடக்கு கிழக்கை இணைக்க முடியாது -ஜனாதிபதி

[ வியாழக்கிழமை, 07 சனவரி 2010, 02:37.17 AM GMT +05:30 ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது ஆட்சிக் காலத்தில் ஒருபோதும் வடக்குக் கிழக்கை இணைக்கப் போவதில்லை என மிகத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் நேற்று முன்நாள் செவ்வாய்க்கிழமை தேசிய கவிஞர்கள் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் பௌத்த மதப் பாடசாலை ஆசிரியர்கள், கைப்பணிப்பொருள் கலைஞர்கள் ஆகியோர் மத்தியில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
எதிர்க்கட்சியைச் சேர்ந்த சிலர் தமது ஆட்சிக் காலத்தில் வடக்குக் கிழக்கு இணைக்கப்படும் என யாழ்ப்பாண மக்களுக்கு உறுதியளித்துள்ளதுடன் தேர்தலில் அவர்களது ஆதரவையும் கோரியுள்ளனர் என ஜனாதிபதி அப்போது தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள் தேர்தலுக்காகப் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வருகின்றன. எனினும் தன்னால் அவ்வாறு செயற்பட முடியாது என்று குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஐக்கியத்தையும் பிரதேச ஒருமைப்பாட்டையும் ஊக்குவிக்கவும், நாட்டை மீளக்கட்டியெழுப்பவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக