விடுதலைப் புலிகளை சித்திரவதை செய்து சுட்டுக்கொன்ற வீடியோ சம்பவம் உண்மையே: ஐ.நா. அதிகாரி
இலங்கையில் ராணுவத்திடம் பிடிபட்ட விடுதலைப் புலிகளை சித்திரவதை செய்து சுட்டுக்கொன்றதாக வெளியான சர்ச்சைக்குரிய வீடியோ பதிவு ஆதாரபூர்வமானது என்று ஐ.நா. உயர் அதிகாரி பிலிப் அல்ஸ்டன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பிடிபட்ட விடுதலைப் புலிகள் சிலரை நிர்வாணமாக்கி, கைகள் பின்புறம் கட்டப்பட்டு, கண்கள் துணியால் மறைக்கப்பட்டு, ராணுவத்தினர் சித்திரவதை செய்த பின்னர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் சம்பவம் பதிவான வீடியோவை பிரிட்டனைச் சேர்ந்த சானல் 4 என்ற நிறுவனம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒளிபரப்பியது. இது உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
போர்க் கைதிகளை சித்திரவதை செய்வது மனித உரிமை மீறலாகும் என்று எதிர்ப்பு கிளம்பியதால் ஐ.நா. அதிகாரி பிலிப் அல்ஸ்டன் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டார்.
அதில் வீடியோவில் பதிவான சம்பவங்கள் அனைத்தும் உண்மையே என்று (07.01.2010) வியாழக்கிழமை நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் தெரிவித்தார். மேலும் இதுதொடர்பாக இலங்கை அரசு சுயேச்சையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் அப்போது கேட்டுக்கொண்டார்..
வெள்ளி, 8 ஜனவரி, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக