ஆனந்த்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
விஸ்வாதன் ஆனந்த்
முழுப் பெயர்
விஸ்வநாதன் ஆனந்த்
நாடு
இந்தியா
பிறப்பு
டிசம்பர் 11 1969 (வயது 40)சென்னை, இந்தியா
பட்டம்
கிராண்ட்மாஸ்டர் (1988)
உலக சாம்பியன்
2000-2002 (FIDE), 2007-இன்றுவரை
FIDE தரவுகோல்
2792 (ஜூலை 2007 FIDE தரவுப் பட்டியலின்படி இல. 1)[1]
எலோ தரவுகோள்
2803 (ஏப்ரல் 2006)
விஸ்வநாதன் ஆனந்த் (பிறப்பு: டிசெம்பர் 11, 1969, சென்னை, இந்தியா), இந்திய சதுரங்க (செஸ்) கிராண்ட் மாஸ்டர் மற்றும் தற்போதய உலக சதுரங்க வெற்றிவீரரும் ஆவார். FIDE ELO மதிப்பீட்டின் படி ஜூலை 2006ல் ஆனந்த் 2779 புள்ளிகள் பெற்றார். ஆனந்த் மாத்திரமே 2800 புள்ளிகளைத் தாண்டிய நால்வரில் ஒருவர். இவர் 1994 இலிருந்து முன்னணி வகிக்கும் மூவரில் ஒருவராக விளங்குகின்றார்.
பொருளடக்கம்[மறை]
1 சதுரங்கமும் ஆனந்தும்
2 உலகச் சதுரங்க வெற்றிவீரர்
3 உலக அதிவேக சதுரங்க வெற்றிவீரர்
4 சதுரங்க பதக்கங்கள்
5 விருதுகள்
6 மேற்கோள்கள்
7 வெளியிணைப்புகள்
//
[தொகு] சதுரங்கமும் ஆனந்தும்
இந்திய செஸ் விளையாட்டில் விஸ்வநாதன் ஆனந்த் குறிப்பிடத்தக்கவர். 14 வயதில் 1983இல் தேசிய சந்துரங்க சாம்பியன் ஆக 9/9 புள்ளிகள் பெற்றார். 15 வயதில் 1984இல் அனைத்துலக மாஸ்டர் (International Master) விருதினைப் பெற்றார். 16 வயதில் தேசிய வெற்றிவீராக மேலும் இருதடவை இந்தவிருதைப் பெற்றார். இவர் ஆட்டங்களை வேகமாக ஆடி லைற்றினிங் கிட் (lightning kid - மின்னல் வேகக் குழந்தை) என்ற பட்டப் பெயரையும் பெற்றார். 1987இல் உலக இளநிலை வெற்றிவீரரான முதலாவது இந்தியரானார்.
விஷி எனச் செல்லமாக இவரது நண்பர்களால் சில சமயம் அழைக்கப் படுகின்றார்.
[தொகு] உலகச் சதுரங்க வெற்றிவீரர்
வெல்வதற்கான வாய்புக்களை மயிரிழையில் நழுவவிட்ட ஆனந்த் இறுதியாக 2000ஆம் ஆண்டில் தெகிரானில் அலெக்சி சிறோவ்-ஐத் 3.5 - 0.5 என்ற ரீதியில் தோற்கடித்ததன் மூலம் தமதாக்கிக் கொணடார். எனினும் அவர் 2002இல் இடம்பெற்ற நொக்-அவுட் ஆட்டத்தில் ருஸ்லான் பனமரியோவிடம் தோற்றார்.
விஸ்வநாதன் ஆனந்த் மெக்சிகோ நகரில் செபம்பர் 2007 இல் இடம்பெற்ற உலக சதுரங்கப் போட்டிகளில் பங்குபற்றினார். செப்டம்பர் 29, 2007 இல் இடம்பெற்ற இறுதிப் போட்டிகளில் 9/14 புள்ளிகள் பெற்று புதிய உலக வெற்றிவீரர் ஆனார். இவர் முன்னாள் உலக வெற்றிவீரர் விளாடிமிர் கிராம்னிக்குடன் 2008 அக்டோபரில் நடந்த போட்டியில் வெற்றி பெற்று உலக வெற்றிவீரர் பட்டத்தை தக்கவைத்துக்கொண்டார். [2]
[தொகு] உலக அதிவேக சதுரங்க வெற்றிவீரர்
அக்டோபர் 2003 இல் FIDE ஊடாக அதிவேக சதுரங்க வெற்றிவீரர் பட்டத்தை வென்றார்.
[தொகு] சதுரங்க பதக்கங்கள்
2003 அதிவேக சதுரங்க வெற்றிவீரர்
2000 சதுரங்க வெற்றிவீரர்
1987 உலக இளநிலை சதுரங்க வெற்றிவீரர், கிராஸ்மாஸ்டர்
1985 இந்திய தேசிய வெற்றிவீரர் - 16 வயதில்
1984 தேசிய மாஸ்டர் - 15 வயதில்
1983 தேசிய இளைநிலை சதுரங்க வெற்றிவீரர், 14 வயதில்
[தொகு] விருதுகள்
சதுரங்க ஆஸ்கார் (1997, 1998, 2003 மற்றும் 2004)
பத்மபூஷண் (2000)
பிரித்தானிய் சதுரங்க கூட்டமைப்பின் Book of the year விருது 1998.
ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது (1991-1992)
தேசியக் குடிமகனுக்கான பத்மசிறீ விருது (1987)
தேசிய விளையாட்டு வல்லுனருக்கான சதுரங்க விருது (1985)
[தொகு] மேற்கோள்கள்
↑ 100 முன்னணி ஆட்டக்காரர்கள் ஏப்ரல் 2007. அணுகப்பட்டது ஏப்ரல் 15 2007.
↑ [1]
[தொகு] வெளியிணைப்புகள்
விஸ்வநாத் ஆனந்தின் ஆட்டங்கள்
சதுரங்கம்
முன்னிருந்தவர்அலெக்சாண்டர் காலிஃப்மான்
ஃபிடே உலக சதுரங்க வீரர்2000–2002
பின் வந்தவர்ருஸ்லான் பனமரியோவ்
முன்னிருந்தவர்விளாடிமிர் கிராம்னிக்
உலக சதுரங்க வீரர்2007 – present
Incumbent
செவ்வாய், 5 ஜனவரி, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக