THAMILEELAM

லேபிள்கள்

எனது வலைப்பதிவு பட்டியல்

வெள்ளி, 8 ஜனவரி, 2010

தமிழருக்கெதிரான போர் குற்ற விசாரணைக்கு முடிவு-ஐ.நா

இலங்கை போர்குற்றம் தொடர்பில் ஐ. நா நிபுணத்துவ குழு அமைக்க தீர்மானம்
இலங்கையில் ஆயுதப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமகள் மீறல், போர்குற்றம் ஆகியவை க்கான சான்றுகள் வலுவடைந்து வரும் நிலையில் ஐ. நா அதுபற்றி விசாரணை செய்வதற்கு முன் ஓட்டமாக நிபுணர்கள் குழுவொன்றை அமைக்க உள்ளது. இது பற்றி பான்கி மூன் பரிந்துரைத்துள்ளார். இந்த நிபுணத்துவர் குழு பிலிப் அல்ஸ்டன் அவர்களுடன் சேர்ந்து இயங்குவதுடன் பான்கி மூனுக்கு ஆலோசனைகளையும் வழங்கும்.
முன்னதாக பிலிப் அல்ஸ்டன் சனல்4 வீடியோ காட்சியினை உண்மை தன்மை வாய்ந்தது என உறுதிப்படுத்தியுள்ளமையும் இதே வேளை இலங்கை உள் நாட்டில் அல்லாது சுதந்திரமான, நம்பிக்கையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என கூறி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ஐ. நாவின் இந்த முயற்சி இலங்கை போர்க்குற்ற விசாரணைகளில் ஒரு திருப்பு முனையாகவோ அல்லது ஐ. நாவுக்கு ஆசியாவில் ஒரு கொள்கை ரீதியான மாற்றத்தினை உண்டு பண்ணுவதாகவோ அமையலாம் எனவும் கருதப்படுகின்றது
..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக