THAMILEELAM

லேபிள்கள்

எனது வலைப்பதிவு பட்டியல்

செவ்வாய், 5 ஜனவரி, 2010

கூட்டமைப்பின் தர்மசங்கடம்

கூட்டமைப்பின் முடிவு இன்று பொன்சேகா சார்பாக வரும்.!
ஆனாலும் உள் முரண்பாடு தொடர்ந்தும் நீடிக்கின்றது
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்கூட்டமைப்பின் முடிவு பெரும்பாலும் இன்று நண்பகல் அளவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது அநேகமாக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதாகவே அமையும் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.எனினும் தமிழ்கூட்டமைப்பின் ஐந்துக்கும் குறையாத நடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த முடிவை எதிர்ப்பார்கள் என்று அறியப்படுகின்றது.ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிக் கும் முடிவைத் தமிழ்க் கூட்டமைப்பு இன்று எடுத்து அறிவித்தாலும், அது தொடர்பில் கூட்டமைப்புக்குள் உள்முரண்பாடு நீடிக் கும் என்று தெரிகின்றது.இதற்கிடையில் நேற்று மதியம் தமிழ்க் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் சென்று எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத்பொன் சேகாவை சந்தித்தமையை அடுத்து, தமிழ்க் கூட்டமைப்பு பொன்சேகாவை ஆதரிக்கும் முடிவை எடுத்துவிட்டது என்ற செய்தியை பொன்சேகாவின் தேர்தல் அலுவலகம் பகிரங்கமாக வெளியிட்டுப் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. பல இணையத்தளங்கள் இச்செய்தியை விசேட தகவலாக அறிவித்தன. எனினும் தமிழ்க் கூட்டமைப்பின் தலைமைகள், இவ்விடயத்தில் இறுதி முடிவு இன்று நடக்கும் கூட்டமைப்பின் கூட்டத்தில்தான் எட்டப்படும் எனத் திரும்பத் திரும்பத் தெரிவித்தன."எமது கூட்டமைப்பில், அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் மட்டத்தில் பொன்சேகாவையே ஆதரிப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டது. எனினும் நாடாளுமன்றக் குழுவில் அம்முடிவு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் வரை அதை வெளியிடுவதில்லை என்று தீர்மானித்திருக்கிறோம்.' எனக் கூட்டமைப்பின் தலைவர் ஒருவர் கூறினார். சரத் பொன்சேகாவை ஆதரிக்கும் முடிவைக் கூட்டமைப்பு எடுத்தாலும் கஜேந்திரகுமார், கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன், சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா ஆகியோர் அந்த முடிவை எதிர்ப்பதில் தீர்க்கமாக இருக்கின்றனர் எனத் தெரியவந்தது.தமிழ்க் கூட்டமைப்பின் நேற்றைய காலை அமர்வில் கஜேந்திரகுமார், பத்மினி சிதம்பரநாதன், கஜேந்திரன் ஆகிய எம்.பிக்கள் இந்தத் தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும் என வாதிட்டபோதும் அதை மறுத்து தமிழ் வேட்டபாளரான சிவாஜிலிங்கத்தை ஆதரிக்கும்படி ஸ்ரீகாந்தா வற்புறுத்தினார். எனினும் தமிழ் வேட்பாளரை ஆதரிக்கும் தனது திட்டத்துக்கு பிறரின் ஒத்துழைப்பு ஏதும் இல்லை என்பது அங்கு அவருக்கு ஓரளவு புரிந்தும், மாலையில் கூட்டத்துக்கு வந்து சேர்ந்து கொண்ட சிவாஜிலிங்கத்தையும் ஒன்று சேர்த்து, தேர்தலைப் பகிஷ்கரிக்க வேண்டும் என்ற அணிக்குத் தாவினார் ஸ்ரீகாந்தா எனக் கூறப்பட்டது.ஸ்ரீகாந்தா, சிவாஜிலிங்கம் போன்றோரின் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை வயதில் மூத்தவரான கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழுத்தலைவர் சம்பந்தன் பெரும் பொறுமையுடன் சகித்துக் கொண்டமை தம்மை ஆச்சரியத்தில் மூழ்கடித்தது என்றார் கூட்டத்தில் கலந்து கொண்ட மற்றொரு எம்.பி ஒருவர்."தம்மீது சுமத்தப்பட்ட வரலாற்றுப் பொறுப்பை எப்படியும் ஒப்பேற்றித் தமது இனத்துக்குரிய கடமையை செவ்வனே செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் இவ்வளவு அவமான, அவமதிப்புக்களையும் சம்பந்தர் பொறுமையாகத் தாங்கிக் கொண்டார் என நினைக்கிறேன்' என்றார் இந்த எம்.பி. "ஸ்ரீகாந்தா, சிவாஜிலிங்கம் போன்றோரை இந்தக் கூட்டத்துக்கு அனுமதித்த தமது தவறுக்காக அவர் இப்படி வாங்கிக் கட்டிக் கொண்டார்' என்றும் அந்த எம்.பி. கூறினார். "கூட்டமைப்பின் வரலாற்றுக் கடமையை இப்படிக் குழப்ப முயன்றவர்களை தமிழ் மக்கள் உரிய முறையில் கவனிப்பார்கள்' என்ற நம்பிக்கையையும் அவர் வெளியிட்டார்.இதற்கிடையில், சரத் பொன்சேகாவை ஆதரிக்கும் முடிவை தமிழ்க் கூட்டமைப்பு எடுத்தால், தமிழர்களுக்கு அது இழைத்த வரலாற்றுத் தவறாகிவிடும் என்றுஆளும் தரப்பு குறை சொல்லியிருக்கிறது. இந்த வரலாற்றுத் தவறுக்காகக் கூட்டமைப்பு பின்னர் அதிகம் வருந்த வேண்டியிருக்கும் என்று ஆளும் தரப்பின் தலைவர் ஒருவர் குறிப்பிட்டார். அவசரகாலச் சட்டத்தை நீடிக்கும் பிரேரணை குறித்து ஆராய்வதற்காக நாடாளுமன்றம் இன்று கூடவிருக்கையில் கூட்டமைப்பின் தீர்மானம் பற்றிய விவகாரம் அங்கு பெரும் சலசலப்பை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக