THAMILEELAM

லேபிள்கள்

எனது வலைப்பதிவு பட்டியல்

வெள்ளி, 8 ஜனவரி, 2010

யாழ் கொழும்பு பேரூந்து சேவை இலகுவாக்கபட்டுள்ளது

இலங்கையின் வடபகுதியிலிருந்து பேருந்து சேவைகளில் மேலும் முன்னேற்றம்
யாழ்ப்பாணம்-பருத்துத்துறை பேருந்துஇலங்கையின் வடக்கே பல வருடங்களாக நிலவி வந்த போர் முடிவுக்கு வந்ததன் பின்னர், முதன்முறையாக யாழ்ப்பாணத்திற்கும் வெளியிடங்களுக்குமான பேருந்து சேவைகள் சுதந்திரமாக நடைபெறத் தொடங்கியிருக்கின்றன.
யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்துகள் யாழ் முற்றவெளிக்குச் சென்று அங்கிருந்து இராணுவத்தின் வழித்துணையுடனேயே நேற்று வரை சேவையில் ஈடுபட்டு வந்தன.
வவுனியா தேக்கவத்தையில் உள்ள இராணுவ சோதனைச்சாவடிக்குச் சென்று, சோதனைகளின் பின்னர் பேருந்துகளில் ஏறி இராணுவ வழித்துணையுடன் வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் பயணிகள் தமது பிரயாணத்தை மேற்கொண்டு வந்தார்கள்.
இப்போது இந்த நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றது. பேரூந்துகள் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பேருந்து நிலையங்களில் இருந்து நேரடியாகத் தமது பிரயாணத்தை மேற்கொள்ளத் தொடங்கியிருக்கின்றன.
இந்தப் புதிய நடைமுறையையடுத்து, ஏ9 வீதியின் பல இடங்களிலும் பிரயாணிகள் இறங்கி ஏறுவதற்காக பேருந்து வண்டிகள் நிறுத்தப்பட்டதாகவும், சுமுகமான நிலையில் பிரயாணம் நடைபெற்று வருவதாகவும் பேரூந்து சாரதி ஒருவர் தெரிவிக்கின்றார்.
புதிய நடைமுறை குறித்து பயணிகள் பலரும் மகிழ்ச்சியும் திருப்தியும் அடைந்திருக்கின்றார்கள்.
nantry ப்ப்க்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக