THAMILEELAM

லேபிள்கள்

எனது வலைப்பதிவு பட்டியல்

புதன், 20 ஜனவரி, 2010

சந்திரிகாவை சந்திக்கும் முயற்சி தோல்வி-மஹிந்த

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சா சில நாட்களாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை சந்திக்க மேற்கொண்ட முயற்சி தால்வியடைந்திருப்பதாக அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியைச் சந்திக்க நேரத்தை ஒதுக்குவதற்காக ஜனாதிபதி பிரபல பௌத்த பிக்கு ஒருவரையும் மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானாவையும் அனுப்பியிருந்தார்.

இந்தச் சந்திப்பை ஏற்பாடு செய்வதற்காக அலவி மௌலானா முன்னாள் ஜனாதிபதியை பல தடவை சந்தித்து பேச்சுநடத்தியுள்ளார்.

இதன்போது ஜனாதிபதியைச் சந்திப்பதில் தனக்கு பிரச்சினைகள் இல்லையெனத் தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி அதற்கு முன்னர் ஜனாதிபதியினால் நிறைவேற்ற வேண்டிய சில விடயங்கள் இருப்பதாகக் கூறியுள்ளார்.



ஹொரகொல்லயிலுள்ள சமாதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்ற ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் சரன குணவர்தனவைக் கொண்டு தாக்குதல் நடத்தியமை தொடர்பாக ஜனாதிபதி முதலில் பகிரங்கமாக மன்னிப்புக் கோரவேண்டும் என சந்திரிக்காக கூறியுள்ளார்.
இதனைத்தவிர ஊழல் மோசடிகளை முடிவுக்குக் கொண்டுவர ஜனாதிபதி முன்வைக்கும் யோசனைகள் செயற்பாட்டு ரீதியான நடவடிக்கைகள் தொடர்பாகவும் கொலை செய்யப்பட்ட லசந்த விக்ரமதுங்க போன்ற ஊடகவியலாளர்கள் தொடர்பான விசாரணைகள் பற்றியும் ஜனாதிபதி பகிரங்கப்படுத்த வேண்டுமென தாம் எதிர்பார்ப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி ஆளுநர் அலவி மௌலானவிடம் வலியுறுத்தி கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதியைச் சந்தித்து தேர்தல் பிரசாரத்திற்கான உதவியைப் பெற்றுக்கொள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்சா மேற்கொண்ட முயற்சி இதுவரை வெற்றியளிக்கவில்லை.





.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக