THAMILEELAM

லேபிள்கள்

எனது வலைப்பதிவு பட்டியல்

செவ்வாய், 5 ஜனவரி, 2010

கூட்டமைப்பின் ராஜதந்திரம்

பொன்சேகாவை, சம்பந்தன் சந்தித்து 10 அம்சத்திட்ட ஆவணம் கையளிப்பு
செவ்வாய்க்கிழமை, 05 சனவரி 2010
எதிரணியின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் நேற்று மாலை சந்தித்து பேசியுள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது, ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்க வேண்டுமானால் எத்தகைய நடவடிக்கைகளை ஐக்கிய தேசிய முன்னணியும், ஜெனரல் சரத் பொன்சேகாவும் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து சம்பந்தன் எம்.பி. விளக்கிக் கூறியுள்ளார்.
இந்த சந்திப்பில்,
அதியுயர் பாதுகாப்பு வலயங்களை நீக்குதல், உரிய வகையில் மீள்குடியேற்றத்தை முன்னெடுத்தல், தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்தல், மீன்பிடித் தடையை முற்றாக நீக்குதல், வர்த்தக வாணிப தடையை நீக்குதல்,இராணுவ முகாம்களை இடமாற்றியமைத்தல்
உள்ளிட்ட 10 அம்சங்களை அடங்கிய ஆவணமொன்றை ஜெனரல் சரத் பொன்சேகாவிடம் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் கையளித்துள்ளார்.
இந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு முடிவெடுக்கப்படுமென சம்பந்தன் எம்.பி. தெவித்துள்ளார். அத்துடன் இந்த விடயங்கள் தொடர்பாக யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஜெனரல் சரத் பொன்சேகா அறிவித்துள்ளதாகவும், இவை தொடர்பான திட்டங்களைத் தயாரித்துள்ளதாகவும் இங்கு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, இந்தச் சந்திப்புக் குறித்து கருத்துத் தெரிவித்த எதிரணி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் பேச்சாளரும், ஜே.வி.பியின் பாராளுமன்றக் குழுத் தலைவருமான அனுரகுமார திஸாநாயக்க, ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளது எனவும், அவர்கள் பொன்சேகாவை ஆதரிப்பார்கள் என்று எதிர்பார்க்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக