பம்பைமடு தடுப்பு முகாமில் உள்ள இளைஞர்கள் மீது விசாரணை தேவையில்லை - கொழும்பு நீதியாளர்
வவுனியா பம்பை மடுவில் உள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களை விசாரணை செய்ய என ஒரு பயங்கரவாத தடுப்பு பிரிவு குழுவொன்றை வவுனியா அனுப்ப நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை கொழும்பு நீதியாளர் ஒருவரால் நிராகரிக்கப்பட்டுள்ளது. பம்பைமடுவில்தடுத்து வைக்கப்பட்டுள்ள 713 தமிழ் கைதிகள் பற்றி விசாரணகைளை மேற்கொள்ள இருக்கும் தேவைகள் பற்றியும் அவர்கள் எந்த விதத்தில் பயங்கரவாதச் செயல்களுடன் தொடர்பு கொண்டு;ள்ளார்கள் என்றும் கேள்விகளை முன்வைத்ததுடன் அவர்கள் குற்றவாளிகள் இல்லை விடுதலை செய்யப்படப்போகின்றவர்கள் எனின் ஏன் விசாரணை என்றும் கோள்வி எழுப்பியுள்ளார். அவர்கள் தடுப்பு காவல் கட்டளையில் படி தடுத்து வைக்கப்படாததால் முன்னய நீதிமன்ற தீர்ப்புக்கள் கருத்தில் எடுக்கப்படவேண்டும் என்றும் நீதியாளர் கருத்து வெளியிட்டுள்ளார். இதில் விடுதலை செய்யப்படவுள்ளவர்கள் சிறு அளவிலான பயங்கரவாதச் செயற்பாட்டில் ஈடுபட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டவர்கள் என சிறீலங்கா அரசு தெரிவித்துள்ள. ஆனால் வரும் தேர்தலை ஒட்டி தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக் கொள்ளும் பொருட்டு மேற்கொள்ளும் தேர்தல் நாடகம் இது என்பது வெளிப்படை.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக